தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை... நவீனமாவது எப்போது?:குடியிருப்பு வசதிகளின்றி வீரர்களும் தவிப்பு| Dinamalar

தமிழ்நாடு

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை... நவீனமாவது எப்போது?:குடியிருப்பு வசதிகளின்றி வீரர்களும் தவிப்பு

Added : ஜன 03, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

பொள்ளாச்சி பகுதியில், தீ விபத்துகளை கட்டுப் படுத்த, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகம் கடந்த, 1944ம் ஆண்டு துவங்கப்பட்டது. நிலைய அலுவலர் மற்றும், 21 தீயணைப்பு வீரர்கள் பணியிடம் உருவாக்கப்பட்டதுடன் போதுமான ஆட்களும் நியமிக்கப்பட்டனர்.தீயணைப்புத்துறை மூலம் பொள்ளாச்சி நகரம், தெற்கு, வடக்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு ஒன்றியங்களில் நடக்கும் தீ விபத்து, உயிர் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இதற்காக, ஒரு தீயணைப்பு வாகனமும், ஒரு ஆம்புலன்சும் வழங்கப்பட்டன. இந்நிலையில், அலுவலகத்தில், போதுமான வசதிகளும், குடியிருப்பு வசதியும் இல்லாததால், தீயணைப்பு வீரர்கள் அவதிப்படுகின்றனர்.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில், ஆண்டுக்கு, 300க்கும் மேற்பட்ட மீட்பு நடவடிக்கைகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுகின்றனர். ஆனால், போதுமான வசதிகளும், நவீன தீயணைப்பு உபகரணங்களும் இல்லாததால் சிரமப்படுகின்றனர். கட்டடம் கட்டப்பட்டு, 70 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதாலும், புதுப்பிக்க நடவடிக்கை இல்லை. அலுவலகம் மட்டுமின்றி ஓய்வெடுக்கும் அறையும் போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது.பொள்ளாச்சி தீயணைப்புத்துறையில் பணியாற்றும் வீரர்களுக்கு குடியிருப்பு வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால், இங்கு பணியாற்றும் வீரர்கள், வாடகை வீட்டில் வசிக்கின்றனர். அழைப்பு வந்தால், மாற்று இடத்தில் தங்கியிருப்பதால், உடனடியாக அலுவலகம் செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது.பொள்ளாச்சி அலுவலகத்துக்கு பிறகு, மற்ற பகுதியில் துவங்கப்பட்ட தீயணைப்பு அலுவலகத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அதுபோன்று, பொள்ளாச்சியிலும் குடியிருப்பு கட்ட வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.கிராமங்களில் குடியிருப்புகள், மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்துள்ளன. பல கி.மீ., துாரம் வரை சென்று தீ அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபடுகின்றனர். மொத்தம், 500க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கியுள்ள பொள்ளாச்சியில், ஒரே ஒரு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வாகனம் மட்டுமே உள்ளது.இதனால், ஒரு பகுதியில் தீ அணைக்கும் சம்பவத்துக்கு செல்லும் போது, மற்றொரு பகுதியில், தீ விபத்து ஏற்பட்டால், அங்கு செல்ல முடியாத சூழல் உள்ளது. கிராமங்கள் அதிகளவு உள்ள நிலையில், ஒரே ஒரு வாகனத்தை மட்டும் பயன்படுத்தி மீட்பு பணியில் ஈடுபடுவதால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.தீயணைப்பு துறையினர் கூறுகையில், 'தீயணைப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு குடியிருப்பு வசதி ஏற்படுத்திக்கொடுக்கவும்; பொள்ளாச்சி தீயணைப்பு அலுவலகம் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிணத்துக்கடவு பகுதியில் தாமதமின்றி அலுவலகம் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீரர்களுக்கு போதுமான வசதிகளை அளிக்கும் போது, மேலும் சிறப்பாக பணியாற்ற முடியும்,' என்றனர்.இடம் தேடும் அதிகாரிகள்கிணத்துக்கடவு தாலுகாவில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்பின், அலுவலகம் எப்போது அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அங்கு அலுவலகம் அமைக்கப்பட்டால், பொள்ளாச்சி தீயணைப்பு வீரர்கள் பணிச்சுமை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், இடம் கிடைக்காததால் அலுவலகம் அமைப்பதில் சிக்கல் நிலவுகிறது. சொந்த கட்டடம் கட்டி உடனடியாக அலுவலகம் துவங்க முடியாத சூழலில், வாடகை கட்டடத்தில், அலுவலகம் செயல்பட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, வாடகைக்காக கட்டடம் தேடிய போது, வாகனம் நிறுத்த இடமில்லாமலும்; தண்ணீர் வசதியின்றி இருப்பதால், அதிகாரிகள், இடம் தேடி அலைந்து வருகின்றனர்.குறைந்தது தீ விபத்துபொள்ளாச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகம் மூலமாக, கடந்த, 2016ம் ஆண்டு, 253 தீ விபத்துகள் மற்றும் உயிர் மீட்பு நடவடிக்கைக்கு, 51 அழைப்புகளும் வந்தன.கடந்தாண்டு, தீ விபத்து, 183; உயிர் மீட்பு, 43; உதவி அழைப்பு, 2 என மொத்தம், 228 அழைப்புகள் வந்தன. கடந்த, 2016ம் ஆண்டை விட, 2017ம் ஆண்டு தீ விபத்துகள் எண்ணிக்கை குறைந்துள்ளன. நார் தொழிற்சாலைகளில், சொந்த உபயோக தீயணைப்பு வாகனங்கள் வாங்கியுள்ளதாலும், பரவலான மழை காரணமாகவும் தீ விபத்துகளின் எண்ணிக்கை கடந்தாண்டை விட குறைந்துள்ளது.மேலும், கிராம பகுதியில் உள்ள கிணறுகள் தண்ணீர் இல்லாமல் வறண்டுள்ளதால், தற்கொலை, தவறி விழுந்தோரை மீட்க அழைப்புகள் வரவில்லை என, கூறப்படுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை