ஊழல் வழக்கு: லாலுவுக்கு தண்டனை விவரம் நாளை அறிவிப்பு| Dinamalar

ஊழல் வழக்கு: லாலுவுக்கு தண்டனை விவரம் நாளை அறிவிப்பு

Updated : ஜன 03, 2018 | Added : ஜன 03, 2018 | கருத்துகள் (21)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஊழல் வழக்கு: லாலுவுக்கு தண்டனை விவரம் நாளை அறிவிப்பு

ராஞ்சி:'கால்நடை தீவன ஊழல் வழக்கில், பீஹார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான, லாலு பிரசாத் யாதவ் மற்றும், 15 பேர் குற்றவாளிகள்' என, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கில் தண்டனை விவரம் அறிவிக்கப்படுவது நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பீஹார் முதல்வராக, 1994 - 1996ல், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர், லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது, கால்நடை தீவனம் வாங்கியதாக போலி பில்கள் கொடுத்து, அரசு கருவூலத்தில் பணம் எடுத்து, மோசடி நடந்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தொடர்புள்ள அனைத்து வழக்குகளும், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தன இதில் தியோகர் மாவட்ட கருவூலத்தில், 89.27 லட்சம் ரூபாய் எடுத்து, மோசடி செய்தது தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடைந்தது.


ஒத்திவைப்பு

ராஞ்சி சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சிவ்பால் சிங், கடந்த ஆண்டு டிசம்பரில் தீர்ப்பளித்தார்.அப்போது, 'லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி' என, நீதிபதி அறிவித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும், 15 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். தண்டனை விபரம் 2018, ஜனவரி, 3ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் ராஞ்சி கோர்ட்டில் இன்று ஆஜரானார். ஆனால், வழக்கறிஞர் மறைவு காரணமாக தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.


சம்மன்

இந்நிலையில், லாலு மகன் தேஜஸ்வி, ரகுவன்ஷ் பிரசாத், மனோஜ் ஜா ஆகியோர் கோர்ட்டை அவமதித்துள்ளதாக கூறி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
எஸ்.ட்டி.ஸ்ரீநிவாஸன் ஒரு நபரை குற்றவாளி என்று அறிவிப்பதற்கு ஒரு நாள்: அதன் பின்பு தண்டனையை அறிவிப்பதற்கு வேறொரு நாள். லாலூட் ப்ரசாத்திற்கு டிசம்பரிலேயே தண்டனையை அறிவிப்பதற்கு என்ன கேடு வந்து விட்டது?! ஜனவரி மூன்றாம் வேற்றுமை தேதி தண்டனை அறிவிக்கபடும் என்றார்கள். மூன்றாம் வேற்றுமை தேதி இறந்து போன இரு வக்கீல்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு நாள் முழுவதும் கோர்ட்டை ஒத்தி வைத்துள்ளனர்.அப்படி செய்ய என்ன அதிகாரம் உள்ளது? என்ன அக்கிரமம் இது? நீதிபதிகள் சர்வாதிகாரி போல் நடந்து கொள்ளலாமா?
Rate this:
Share this comment
Cancel
Senthil kumar - coimbatore,இந்தியா
03-ஜன-201821:15:46 IST Report Abuse
Senthil kumar நாட்டையே உலுக்கிய 2 G என்னாச்சு ? இவை நீதி மன்றங்கள் அல்ல வழக்காடு மன்றங்கள்....
Rate this:
Share this comment
Cancel
Ramamoorthy P - Chennai,இந்தியா
03-ஜன-201818:41:27 IST Report Abuse
Ramamoorthy P வயதாகாத ஊழல்வாதிகள் தப்பிக்கும்போது இந்த வயதான ஊழல் வாதியையும் விட்டுவிடலாம் பாவம்.
Rate this:
Share this comment
Cancel
RP Iyer - Bengaluru,இந்தியா
03-ஜன-201815:24:47 IST Report Abuse
RP Iyer He may be let off with a light punishment.
Rate this:
Share this comment
எஸ்.ட்டி.ஸ்ரீநிவாஸன்உமக்கு லாலூட் ப்ரசாத் பங்கு ஏதும் கொடுத்தாரா! லைட் பனிஷ்மென்ட் போரும் என வக்காலத்து வாங்குகிறீர்!!...
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
03-ஜன-201812:53:22 IST Report Abuse
தமிழ்வேல் ஜெயில்ல என்ன தீனி போடுவீங்க ? அதேதானே ?
Rate this:
Share this comment
Cancel
03-ஜன-201812:15:41 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் சாகும்வரை சிறை தண்டனை என்று அறிவியுங்கள். இல்லையென்றால் ஊழல் செய்வதுதான் அரசியல்வாதிகளின் தகுதி என்றாகிவிடும்
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
03-ஜன-201812:14:37 IST Report Abuse
Pasupathi Subbian பத்து தலைமுறைக்கு வேண்டிய சொத்துக்களை குவித்துவிட்டார். இனி கவலையே இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Murugan - Mumbai  ( Posted via: Dinamalar Windows App )
03-ஜன-201812:11:26 IST Report Abuse
Murugan இந்த ஊழல் அரசியல்வாதிகளுக்கு தண்டனை மட்டும் போதாது சொத்துக்களையும் பறிமுதல் செய்யவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
03-ஜன-201811:27:21 IST Report Abuse
GB.ரிஸ்வான் பணம் கொழுத்த அரசியல்வாதிகளுக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் தண்டனை இல்லை... அப்படியே தண்டனை கிடைத்தாலும்... சிறையில் இருந்து ஜாலியாக ஷாப்பிங் போகலாம் வரலாம்....சிறையையே சுவர்கள் இடித்து மாடமாளிகை ஆக்கலாம்... அது தான் நம் தேசம்...
Rate this:
Share this comment
Cancel
03-ஜன-201810:04:45 IST Report Abuse
தாயு.பாலன் தூக்குதண்டனைதான் ஊழல் பேர்வழிகளுக்கு சரியாக இருக்கும். என்ன செய்வது, சட்டத்தை இயற்றுவதே இந்த ஊழல் வாதிகள்தானே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை