தனி சேனல், நாளிதழ்: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தனி சேனல், நாளிதழ்: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு

Updated : ஜன 03, 2018 | Added : ஜன 03, 2018 | கருத்துகள் (32)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை: சென்னையில் நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நடக்க உள்ள சட்டசபை கூட்டம், ஆர்கே நகர் தேர்தல் தோல்வி, தனி டிவி சேனல், நாளிதழ் துவக்குவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் 104 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.


முயற்சி

தமிழக சட்டசபை கூட்டம், வரும், 8ல் துவங்குகிறது. அன்று, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், சட்டசபையில் உரையாற்றுகிறார். கூட்டத்தில்,சுயேச்சையாக வெற்றி பெற்ற தினகரனும்,பங்கேற்க உள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 'டிபாசிட்'டை பறிகொடுத்த தி.மு.க.,வினர், சட்டசபையில், பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளனர். மேலும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களை தங்கள் வசம் இழுத்து, ஆட்சியை கவிழ்க்க, தினகரனும் முயற்சித்து வருகிறார். இவற்றை முறியடிக்கவும், சட்டசபை கூட்டத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை தீர்மானிக்கவும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று (ஜன.,3), சென்னையில், கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமை வகித்தனர்.


ஆலோசனை

இந்த கூட்டத்தில், சட்டசபை தொடர், எதிர்க்கட்சிகளை சமாளிப்பது, ஆர்கே நகர் தேர்தல் தோல்வி, சட்டசபைக்கு வரும் தினகரனை எதிர்கொள்வது குறிதது ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிகிறது.


தனி சேனல்

இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: சட்டசபை தொடரில் எம்எல்ஏக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும். தினகரன் அரசை விமர்சனம் செய்யும் போது கூச்சல் குழப்பத்தில் ஈடுபடக்கூடாது. கொறடா உத்தரவை மீறி செயல்படக்கூடாது. மக்கள் சார்ந்த பிரச்னைகளுக்கு துறை ரீதியிலான அமைச்சர்கள் பதிலளிப்பார்கள். அதிமுகவுக்கு தனி சேனல் மற்றும் நாளிதழல் துவங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தயாராகுங்க...

துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில், எம்எல்ஏக்கள் கொறடா உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும். சட்டசபையில் கூச்சல் குழப்பத்தில் ஈடுபடக்கூடாது. திமுக எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். தினகரன் எழுப்பும் பிரச்னைகளுக்கு முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலளிப்பார்கள். கட்சிக்கும், ஆட்சிக்கும் தொய்வு இல்லாமல் அமையும் வகையில் எம்எல்ஏக்கள் செயல்பாடு இருக்க வேண்டும். ஏப்ரல் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடக்க வாய்ப்பிருப்பதால் எம்எல்ஏக்கள் தயாராக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


சொந்த பிரச்னைகள்:

இந்த கூட்டத்தில், தற்போது வரை 104 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, பாஸ்கரன், செல்லூர் ராஜூ, ஆறுக்குட்டி, சிவசுப்ரமணியம், பிரபு, பவுன் ராஜ் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக கலந்து கொள்ளவில்லை. பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வமும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதற்கான காரணம் தெரியவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumalai Ayyathurai - chennai,இந்தியா
04-ஜன-201801:34:24 IST Report Abuse
Thirumalai Ayyathurai அதிமு-வின் முடிவுகள் வரவேற்கத்தக்கவை. உள்ளாட்சித் தேர்தலுக்கு அவசரம் ஒன்றுமில்லை. பாராளு மன்றத் தேர்தல் முடியும் வரை உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப் போடுவதே மேல். அதுவே மக்களின் விருப்பம்.
Rate this:
Share this comment
Cancel
venugopal - COIMBATORE,இந்தியா
04-ஜன-201800:52:43 IST Report Abuse
venugopal I don't see any threat to the present set-up.Tinakaran is showing over confidence..R K Nagar is not whole tamilnad.
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
03-ஜன-201821:42:38 IST Report Abuse
தேச நேசன் Ha ha ha too much afraid of single person TTV ? Sabaaaash....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X