பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக சிவகாசியில் கடைகள் அடைப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக சிவகாசியில் கடைகள் அடைப்பு

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சிவகாசி, பட்டாசு, கடைகள், அடைப்பு

சிவகாசி:நாடு முழுதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து பதிலளிக்க மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட அச்சத்தில் விற்பனையாளர்கள் சிவகாசி பட்டாசு ஆலைகளுக்கு ஆர்டர் கொடுக்கவில்லை. இதனால், பட்டாசு தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து தொழிலை பாதுகாக்க வேண்டும் என கடந்த சில நாட்களாக பட்டாசு தொழிற்சாலைகளை மூடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி இன்று சிவகாசியில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதன்படி அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. முன்னாள் திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன்பின்னர் காமராஜர் சிலை முதல் கோட்டாட்சியர் அலுவலகம் வரை தொழிலாளர்கள் பங்கேற்ற பேரணி நடந்தது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sithu Muruganandam - chennai,இந்தியா
04-ஜன-201802:43:30 IST Report Abuse
Sithu Muruganandam பட்டாசுகள் கடுமையான சுற்றுச்சூழல்மாசை ஏற்படுத்துகின்றன என்பது மிகவும் உண்மைதான். இதற்குமட்டும் சுற்றுச்சூழலிலிருந்து விலக்கு கொடுப்பதென்பது தவறு. சுற்றுச்சூழல்மாசை ஏற்படுத்துகின்ற அத்தனையையும் தடை செய்வதில் தவறு இல்லை. தீபாவளிக்கு அடுத்த நாளை பாருங்கள் புகைமூட்டமாக இருக்கும். மூக்கைத்துடைத்தால் கரும் புகை படிந்திருப்பது தெரியும். இதைத்தடை செய்ய வேண்டியது மிக மிக அவசியமே. ஆனால் திடீரென்று தடை செய்தால் அந்த ஏழைத் தொழிலாளர்கள் தெருவில்தான் நிற்க வேண்டும். அதை நம்பித்தான் அவர்கள் வாழ்க்கையே இருக்கிறது. ஆகவேஅவர்களுக்கு வேறு வேலைக்கு உத்தரவாதம் செய்துவிட்டு படிப்படியாக தடையாக கொண்டு வரலாம்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-ஜன-201802:40:13 IST Report Abuse
தமிழ்வேல் ரெண்டு காமெடி பீசு இதுபத்தி வாய தொரக்கலியே... சத்த சபையிலே வெடிக்கும்..
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
04-ஜன-201800:13:47 IST Report Abuse
கதிரழகன், SSLC எல்லாம் இந்த வியாபார மத அடிமைகள் செய்யற கூத்து தான். இந்து பண்டிகை ஒன்னு ஒண்ணா குறி வெச்சு தாக்குறாக. நம்ம மடப்பசங்க இத புரிஞ்சுக்கவே இல்ல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை