அவனியாபுரம் ஜன.,14 பாலமேடு ஜன.,15, அலங்காநல்லூரில் ஜன.,16ல் ஜல்லிக்கட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அவனியாபுரம் ஜன.,14 பாலமேடு ஜன.,15, அலங்காநல்லூரில் ஜன.,16ல் ஜல்லிக்கட்டு

Added : ஜன 03, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: பொங்கல் பண்டிகை முன்னிட்டு மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் வழக்கமாக ஜல்லிக்கட்டு நடக்கும். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து விழா ஏற்பாட்டாளர்களுடன் மதுரை கலெக்டர் வீரராகவ ராவ் ஆலோசனை நடத்தினார். அப்போது அவனியாபுரத்தில் ஜன.,14 , பாலமேட்டில் ஜன.,15 , அலங்காநல்லூரில் ஜன.,16ல் ஜல்லிக்கட்டு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.பின்னர் கலெக்டர் கூறியதாவது: தகுதியான காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் அனுமதிக்கப்படும். காளைகள், வீரர்களை பரிசோதனை செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டை பார்வையாளர்கள் அனைவரும் பார்க்க கேலரி அமைக்கப்படும். ஜல்லிக்கட்டு சிறப்பாக நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X