மஹாராஷ்டிராவில் தொடரும் கலவரம்: பார்லி.,யில் எதிரொலிப்பு| Dinamalar

மஹாராஷ்டிராவில் தொடரும் கலவரம்: பார்லி.,யில் எதிரொலிப்பு

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (32)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மஹாராஷ்டிரா,Maharashtra, கலவரம், பஸ்கள், buses,  ரயில்,train,  காங்கிரஸ், Congress,லோக்சபா, Lok Sabha, மல்லிகார்ஜூனா கார்கே , Mallikarjun Kharge, பார்லிமென்ட்,Parliament, பீமா கோரேகாவ்ன் ,Bhima Goregaon,

மும்பை: மஹாராஷ்டிராவில் இன்று(ஜன.,3) நடந்த முழு அடைப்பு போராட்டத்தில் பல இடங்களில் கலவரம் வெடித்தது. பஸ்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டன. இந்த விவகாரம் பார்லிமென்டில் எதிராலித்தது


கைது

மஹாராஷ்டிர மாநிலம், புனேயில், பீமா கோரேகாவ்ன் என்ற இடத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல், வன்முறை சம்பவம், தலைநகர் மும்பைக்கும் பரவியது. இதனை கண்டித்து இன்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால், மும்பையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 21 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நாக்பூர், புனே, பாரமதி உள்ளிட்ட இடங்களில் போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.


ரயில் ரத்து

மும்பை, புனேயில் பல இடங்களில் ரயில் மற்றும் பஸ் போக்குவரத்தை போராட்டக்காரர்கள் மறிக்க முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். மும்பையில் துறைமுக வழியில் உள்ளூர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட குளிர்சாதன புறநகர் ரயில் சேவை நாள் முழுவதும் ரத்து செய்யப்பட்டது.


தொடரும் வன்முறை

சேதம்

பல இடங்களிலும் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். 13 பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. சதாரா நகர் முதல் பாரமதி வரையிலான பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புனேயின் டெகான் என்ற இடத்தில் பஸ்களை இயக்கவிடாமல் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். மும்பையில் பஸ்கள், கார்கள், ஆட்டோ ரிக்ஷா க்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பல இடங்களில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. தானேயில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மஹாராஷ்டிரா - கர்நாடகா இடையிலான பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.


வலுக்கட்டாயம்

பாரமதி, சங்லி, மிராஜ் நகரங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. நாக்பூரில் பெரும்பாலான பள்ளிகள் மற்றும் காய்கறி கடைகள் மூடப்பட்டுள்ளன. ஏராளமான போராட்டகாரர்கள் தெருவில் கூடியுள்ளனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. கோர்ஜியான் மற்றும் விரார் பகுதிகளில் திறந்திருந்த கடைகளை வலுக்கட்டாயமாக மூட செய்தனர்அவுரங்காபாத் நகரில் வாகனங்கள் மற்றும் கடைகள் மீது கற்கள் வீசப்பட்டன. இதில் பல வாகனங்கள் சேதமடைந்தன. இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அந்நகருக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.


பார்லியில்

இந்த பிரச்னை பார்லிமென்டில் எதிரொலித்தது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.லோக்சபாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லிகார்ஜூனா கார்கே பேசும் போது, மோடி மஹாராஷ்டிரா கலவரம் குறித்து விளக்கமளிக்க வேண்டும். அவர் அமைதியாக இருக்கக்கூடாது என வலியுறுத்தினார்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Power Punch - nagarkoil,இந்தியா
04-ஜன-201810:57:42 IST Report Abuse
Power Punch சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறதே...ஆட்சியை கலைங்களேண்டா...கவர்னர் அறிக்கை ஏன் கேட்க வில்லை ?? இங்க மட்டும் கவர்னர் முதல்வர் போல செயல் படுகிறாரே ........
Rate this:
Share this comment
Cancel
yaaro - chennai,இந்தியா
04-ஜன-201802:36:08 IST Report Abuse
yaaro இதிலே காமெடி என்னென்ன பேஷ்வாக்களின் சேனையில் அரபி முஸ்லிம்கள் இருந்தார்கள் ..முஸ்லிம்கள் தோற்றதை இங்குள்ள முஸ்லிம்கள் கெக்கேபிக்கேன்னு உளறுவது பரிதாபம் தான். ஜாதி வேணாம்னு சொல்லுவானுங்க ஆனா இப்போ எப்படியாவது ஜாதி ப்ரிச்சனை உருவாக்கி தலித் ஓட்டுக்களை வாங்கலாம்னு யாரு கலவரம் பண்ணறது ? கோரேகான்க்கும் ஜிக்னேஷ் மேவாணி, JNU உமர் காலித், வெமுலாவோட அம்மா ..இவர்களுக்கெல்லாம் அங்க என்ன வேலை ?
Rate this:
Share this comment
Cancel
BoochiMarunthu - Paradise papers,பனாமா
03-ஜன-201821:13:43 IST Report Abuse
BoochiMarunthu ரஜினியும் இதே மகாராஷ்டிரா தான் .
Rate this:
Share this comment
yaaro - chennai,இந்தியா
04-ஜன-201802:31:23 IST Report Abuse
yaaroயப்பா ..செம கண்டுபிடிப்பு...யாரவது நோபல் பரிசு குடுங்க இந்த மேதாவிக்கு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X