முத்தலாக் மசோதா மீது காரசாரம்: ராஜ்யசபா ஒத்திவைப்பு | Dinamalar

முத்தலாக் மசோதா மீது காரசாரம்: ராஜ்யசபா ஒத்திவைப்பு

Updated : ஜன 03, 2018 | Added : ஜன 03, 2018 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
முத்தலாக்,Muthalaq, ராஜ்யசபா,Rajya Sabha, ரவிசங்கர் பிரசாத், Ravi Shankar Prasad,  காங்கிரஸ்,Congress, இஸ்லாம் பெண்கள் ,  Islam Women,  சுப்ரீம் கோர்ட் ,Supreme Court,  சிறை தண்டனை, Prison, குலாம் நபி ஆசாத் , Ghulam Nabi Azad, அமைச்சர் அருண் ஜெட்லி, Minister Arun Jaitley,

புதுடில்லி: எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே முத்தலாக் தடுப்பு மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது காரசார விவாதம் நடந்த பிறகு, சபை நாளை ஒத்தி வைக்கப்பட்டது..


நிறைவேறியது

'முத்தலாக்' கூறி விவாகரத்துச் செய்யும் நடைமுறையால், இஸ்லாம் சமூகத்து பெண்கள் பாதிக்கப்படுதாக கூறப்படுவதால், அதை தடுக்கும் விதமாக, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலின்படி, மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, முத்தலாக் கூறுவது கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு, சம்பந்தப்பட்ட ஆணுக்கு சிறை தண்டனை வழங்குவதற்கு வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆளும், பா.ஜ., கூட்டணிக்கு, லோக்சபாவில் பெரும்பான்மை இருப்பதால், கடந்த வியாழன் (2017 டிச.,28) அன்று, இந்த மசோதா நிறைவேறியது.


விவாகரத்து

இந்நிலையில், இந்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ராஜ்யசபாவில் தாக்கல் செய்து பேசும்போது, இந்த மசோதா முக்கியமானது. இதனை விவாதத்திற்கு எடுக்க வேண்டும். மசோதா லோக்சபாவில் நிறைவேற்றிய பின்னரும் வரதட்சணை கொடுக்கவில்லை எனக்கூறி மொரதாபாத்தில் தலாக் கூறி விவாரத்து நடந்துள்ளது எனக்கூறினார்.
அப்போது, காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத் பேசும்போது, முத்தலாக் மசோதா தாக்கல் காரணமாக அமளியில் ஈடுபடுவதாக அமைச்சர் கூறுகிறார். ஆனால், அதற்காக கலவரத்தில் ஈடுபடவில்லை. நாட்டில் நடப்பதை கண்டித்து தான் அமளியில் ஈடுபட்டோம். மக்கள் இறந்து வருகின்றனர். மசோதாவை குறித்து நடைமுறைகளை நாங்கள் பின்பற்றுகிறோம் எனக்கூறினார்.
அப்போது அமைச்சர் அருண் ஜெட்லி குறுக்கிட்டு, மாநில பிரச்னைகள் மாநில அரசுகள் தான் கவனிக்க வேண்டும். ஆனால், முத்தலாக் தடுப்பு மசோதா முக்கியமானது எனக்கூறினார்.
தொடர்ந்து இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை ராஜ்யசபா தேர்வு குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக்கூறி கோஷம் எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து விவாதம் நடந்த பிறகு, சபை நாளை ஒத்தி வைக்கப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravi - thiruvananthapuram,இந்தியா
04-ஜன-201806:15:27 IST Report Abuse
ravi Congress will never learn .Politics based on Dalit. and Muslim vote bank cannot last long.Both these communities are about to join hands and emerge as political force
Rate this:
Share this comment
Cancel
ZahirHussain - Doha,கத்தார்
03-ஜன-201819:24:18 IST Report Abuse
ZahirHussain What does the Quran say about triple talaq? Let me give you a brief on Talaq before coming to conclusion to whether a ban is necessary or not. Talaq is a right given to men by islam to divorce his wife in case if the marriage cant be continued for some reason. It is similar to Khula, a right given to muslim women to seperate from her husband if she feels they cant live together hereafter( mind you the reasons have to be valid in both the case or they are sure be questioned here if not definitely on the day of judgement). There is one significant different between both the methods. In women's case Islam give her extra freedom and authority i.e A woman can divorce her husband(khula) with immediate effect. But in case of the talaq, once given, the husband has to wait for three months. This is when you have to know about the triple talaq . The triple talaq doesnt mean saying or messaging 'talaq' three times and ending marriage. Rather it means the person has to wait for a period of three months . Within the stipulated time if there is change in mind or the concerned problem is resolved mutually, they sure can continue the marriage . “Divorced women remain in waiting for three periods, and it is not lawful for them to conceal what Allah has d in their wombs if they believe in Allah and the Last Day. And their husbands have more right to take them back in this [period] if they want reconciliation. And due to the wives is similar to what is expected of them, according to what is reasonable. But the men have a degree over them [in responsibility and authority]. And Allah is Exalted in Might and Wise” The Quran 2:228 For the second time (which is not bound to happen immediately) if they face an arduous problem, talaq can be pronounced again with the same procedure. “Divorce is twice. Then, either keep [her] in an accep manner or release [her] with good treatment… The Quran 2:229 In the mean time it the responsibilty of the family members to try to reconcile them. The muslim clerics (The Jama'th) can also be approached . The third time will be the final chance given to a muslim. Things become totaly tough for the husband. It has to be noted that several months or years passes between each talaqs ( If Allah's laws are obeyed). “And if he has divorced her [for the third time], then she is not lawful to him afterward until [after] she marries a husband other than him. And if the latter husband divorces her [or dies], there is no blame upon the woman and her former husband for returning to each other if they think that they can keep [within] the limits of Allah . These are the limits of Allah , which He makes clear to a people who know” The Quran 2:230 After the third talaq the marriage has really come to an end now. The three chances are exhausted by now. Even then the husband wishes to reunite it is not possible unless the wife who have entered another marriage ( if this happens) divorces her husband which is highly impossible. This is TALAQ, Islams way of dealing with divorces. There is a serious confusion nowadays (especially in India ) among the both muslim and non-muslim people regarding talaq . It can never be said thrice at one go Do you know that three (divorces) were treated as one during the lifetime of Allah's Apostle (Peace be upon him), and that of Abu Bakr, and during three (years) of the caliphate of Umar (Allah be pleased with him)? Ibn Abbas (Allah be pleased with them) said: Yes. Sahih Muslim 3492 BUT இஸ்லாம் NOT ALLOWED டு GIVE தி தலாக் BY வாட்ஸாப்ப், OR டெலிபோன் OR எனி சோசியல் மீடியா
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
03-ஜன-201819:11:21 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM பெரும்பான்மையான இந்து பெண்கள் இன்னமும் சம உரிமை பெறாமல் உள்ள போது, காதலிக்கும் பெண்களை ஆணவ படுகொலை செய்யும் நிலை இருக்கும்போது , இஸ்லாமிய பெண்களுக்காக இப்படி பாஜக வரிந்துகட்டிக்கொண்டு நிற்பதேன்?... இவ்வளவுக்கும் பெரும்பான்மையான இந்து பெண்களை விட , இஸ்லாமிய பெண்கள் ஓரளவுக்கு சம உரிமையுடன் இந்தியாவில் வாழ்ந்து வருவதாக தான் நான் நினைக்கிறேன்... பாஜக முதலில் சாதீய ஆணவ படுகொலைகளை தடுக்க சட்டம் கொண்டுவரவேண்டும்... குறிப்பாக, ஹரியானா, ராஜஸ்தான், மஹா, மபி, உபி , போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் தான் ஆணவ படுகொலைகள் , பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகம் நடக்கிறது என்பது பத்திரிகைகளில் படித்த ஓன்று... ஆக, ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுவது போலல்லாமல், தங்களுக்கு ஒட்டு போட்ட இந்து மக்களுக்கு பாஜக இனியாவது ஏதாவது நன்மை செய்ய முன்வர வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X