முத்தலாக் விவகாரத்தில் காங்., இரட்டை வேடம்: அருண் ஜெட்லி| Dinamalar

முத்தலாக் விவகாரத்தில் காங்., இரட்டை வேடம்: அருண் ஜெட்லி

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
அருண் ஜெட்லி,Arun Jaitley, காங்கிரஸ்,Congress, பா.ஜ, BJP,  முத்தலாக், Muthalak,  ராஜ்யசபா ,Rajya Sabha,  அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்,Minister Ravi Shankar Prasad,  லோக்சபா, Lok Sabha,

புதுடில்லி: முத்தலாக் விவகாரத்தில் காங்., இரட்டை வேடம் போடுவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று பார்லி.,யில் நடந்த ராஜ்யசபா கூட்டத்தின் போது மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் முத்தலாக் மசோதாவை தாக்கல் செய்ய முயன்றார். அப்பொழுது காங்.,கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து கூட்டம் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில் :‛‛ முத்தலாக் விவகாரம் கடந்த வாரம் லோக் சபாவில் விவாத்திற்கு வந்தபோது காங்., கட்சி அதை ஆதரித்தது. ஆனால் இன்று ராஜ்யசபாவில் மசோதாவை தாக்கல் செய்ய விடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டது. நடப்பு பார்லி., கூட்ட தொடரில் இந்த மசோதாவை தாக்கல் செய்ய விடாமல் இழுத்தடிக்க காங்., முயற்சிக்கிறது. இதன் மூலம் முத்தலாக் விவகாரத்தில் காங்., கட்சியின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது. '' இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தேச நேசன் - Chennai,இந்தியா
04-ஜன-201808:05:07 IST Report Abuse
தேச நேசன் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை இரட்டைவேடம்தவிர வேறு வழியில்லையே . ஜமாத்துகளின் ஆதரவு வேண்டுமென்றால் சட்டத்தை எதிர்க்கவேண்டும் இஸ்லாமிய பெண்களின் ஆதரவு வேண்டுமென்றால் சட்டத்தை ஆதரிக்கவேண்டும் இரண்டையும் மாறிமாறி செய்தால் இருபக்க ஆதரவும் கிடைக்கும் என்பது காங்கிரசின் கனவு ஆனால் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை கனவு பட்டினியில்தான் போய்விடும்
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
04-ஜன-201803:59:34 IST Report Abuse
Kasimani Baskaran காங்கிரஸ் நிமிடத்துக்கு ஒரு முறை அதன் சிந்தனையை மாற்றும்... ஆட்சிக்கு வர என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்...
Rate this:
Share this comment
Cancel
chails ahamad - doha,கத்தார்
04-ஜன-201800:17:01 IST Report Abuse
chails ahamad கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளில் , தீராத பிரச்சனையில் முத்தலாக் கூறி பிரிவது என்பது அத்தனை எளிதான காரியம் இல்லை , ஒவ்வொரு முறை தலாக் கூறுவதற்கும் ஒர் குறிப்பிட்ட கால இடைவெளியில் இருவருக்குள்ளும் சமாதானம் ஏற்படாத பட்சத்தில் இரண்டாவது முறை தலாக் , அதே போன்றே மூன்றாவது முறை தலாக் கூறுவதற்கு முன்பும் ஒர் அளவு கால இடைவெளி விட்டு சமாதானம் அடையாத பட்சத்தில் கடைசி தலாக் முத்தலாக் கூறி பிரிய வழி ஏற்படுத்துகின்றது இஸ்லாம் கூறிய முத்தலாக் வழி முறைகள் என்பது தெளிவாக இருக்க , தற்போது பா ஜ ஆட்சியில் கொண்டு வரப்படும் முத்தலாக் தடை மசோதா மிகவும் தவறான ஒன்றாகும் என்ற நிலையில் , முத்தலாக் கூறி பிரிந்தால் அந்த ஆணுக்கு மூன்று வருட சிறை தன்டனை என தலாக் மசோதாவில் குறிப்பிட்டுள்ள நிலையில் , சிறைக்கு செல்லும் அந்த ஆண் மகனால் எந்த வருமானத்தில் தலாக் கூறப்பட்ட பெண்ணுக்கும் , பிள்ளைகளுக்கும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்பதை பற்றி சிந்திக்க வேண்டும் , சிறையில் உள்ள ஆண் மகனால் எந்த வருமானத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் , பிள்ளைகளுக்கும் ஜீவனாம்சம் வழங்குவது என்பதை பற்றி சிந்திக்க வக்கற்று அவசர கோலத்தில் மதவெறி ஒன்றே முன்னிற்க அறிவீலிகளாகிய பா ஜ ஆட்சியாளர்கள் முத்தலாக் மசோதாவை நிறைவேற்றிட துடிப்பதை மக்களின் நலத்தில் அக்கறையுடைய எதிர்கட்சிகள் இந்த மசோதாவை எதிர்ப்பது நியாயமான செயல்பாடுகளே என்பதை அனைவரும் அறிந்துள்ள நிலையில் , காங்கிரசை குறை பேச சிறிதளவும் தகுதியற்ற பா ஜ அமைச்சர்களில் ஒருவராகிய திரு . அருண் ஜெட்லி அவர்கள் காங்கிரசை குறை பேசுவது ஏற்புடையதன்று. இறைவனால் வெறுக்கப்பட்ட விடயமே தலாக் கூறும் விவகாரமாகும் , இஸ்லாமிய சமுதாயத்தில் எங்கேயோ எவரோ ஒருவர் தலாக்கை பற்றி சரியான புரிதல் இல்லாமல் முத்தலாக் கூறி பிரிந்தால் அதற்காக தலாக்கை பற்றி புரிதல் இல்லாத இந்த ஆட்சியாளர்களும் முத்தலாக் மசோதா என்ற பெயரில் செயல்படுத்த விழைகின்ற கேலி கூத்துகளுக்கு எதிர்கட்சியினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது நியாயமான ஒன்றே .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X