கருணாநிதியிடம் ஆசி பெற்றேன் : ரஜினி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதியிடம் ஆசி பெற்றேன் : ரஜினி

Updated : ஜன 04, 2018 | Added : ஜன 03, 2018 | கருத்துகள் (69)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 கருணாநிதி,karunanidhi, தி.மு.க,D.M.K,  ரஜினிகாந்த், Rajinikanth, ஸ்டாலின்,stalin, புத்தாண்டு வாழ்த்து,ரஜினி,Rajini,  Kollywood,

சென்னை: நடிகர் ரஜினி தனிக்கட்சி துவங்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துள்ளார். அவரை திமுக செயற்தலைவர் ஸ்டாலின் வரவேற்றார்.


ஆசி:

சந்திப்புப்பிற்கு பின் ரஜினி பேசியதாவது : ‛‛ கருணாநிதிக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தேன், அவரது உடல் நலம் குறித்து பேசினேன் கட்சி ஆரம்பிக்கவுள்ள திட்டம் குறித்து அவரிடம் கூறி ஆசி பெற்றேன்.'' இவ்வாறு கூறினார்.


அழிந்த வரலாறு:

இது குறித்து திமுக செயற்தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது : ‛‛ கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க வேண்டும் என ரஜினி கேட்டிருந்தார். அதன் படியே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அவர் கருணாநிதி மற்றும் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார். அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து கருணாநிதியிடம் தெரிவித்து ஆசி பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். ரஜினியை பொறுத்தவரை ஆன்மீக அரசியல் என்ற ஒன்றை கையில் எடுத்துள்ளார். நடிகர் விஜயகாந்த் கட்சி துவங்கும்போதும் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார். இது திராவிட இயக்கத்தை அழிக்கும் முயற்சி என பலர் கூறி வருகின்றனர். திராவிட இயக்கத்தை அழிக்க முயன்ற பலர் அழிந்த வரலாறுதான் இங்கு உள்ளது '' இவ்வாறு கூறினார்.கருணாநிதியுடன் ரஜினி சந்திப்பு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணிமாறன் - chennai,இந்தியா
04-ஜன-201811:02:11 IST Report Abuse
மணிமாறன் இந்த ரஜினி கட்சி ஆரம்பித்து நோகாம நுங்கு தின்ன பார்க்குறாரு...கமல் இவருக்கு எவ்வளவோ மேல்...ஜெயித்தால் தலைவன்..இல்லை என்றால் போராளி " என்று நேர்மையாக சொன்னவர்...
Rate this:
Share this comment
Cancel
sampath.sam - chennai,இந்தியா
04-ஜன-201810:23:09 IST Report Abuse
sampath.sam கரு மைண்ட் வாய்ஸ்: நாற்காலிக்கு சண்டைபோடும் நாமெல்லாம் ஒரே இனமடா..........?
Rate this:
Share this comment
Cancel
Guru Murthi - Silvassa,இந்தியா
04-ஜன-201810:00:56 IST Report Abuse
Guru Murthi திரு விஜயகாந்த் ஆசி பெற்றார் இப்பொழுது அட்ரஸ் இல்லை அதேபோல் திரு ரஜினிகாந்த் ஆசி பெற்றார் அப்போ என்று போகப்போறார் எங்கப்பன் கிட்ட ஆசிர்வாதம் வாங்கி யாரும் உறுபட்டதில்ல விஜயகாந்த் மாதிரி நீயும் அட்ரஸ் இல்லாம போவ"
Rate this:
Share this comment
Cancel
மணிமாறன் - chennai,இந்தியா
04-ஜன-201809:59:20 IST Report Abuse
மணிமாறன் இதுதான் ஆன்மீக அரசியல்...இப்போ வெளங்குச்சா?? வெளங்கலேன்னா இன்னும் வேற இருக்கு... வாங்குற சம்பளத்தில் பாதி கருப்பா வாங்குறது... 120 ரூபாய் டிக்கெட்டை 1000 ரூபாய்க்கு விக்கிறது...இதை எல்லாம் காப்பாத்திக்க பிஜேபி யோட பாக்கெட்ல ஒளிஞ்சிக்கறது... இது இன்னொரு டைப்பு ஆன்மீக அரசியல்...
Rate this:
Share this comment
Cancel
Krishna Prasad - Chennai,இந்தியா
04-ஜன-201809:42:36 IST Report Abuse
Krishna Prasad போயும் போயும் ஸ்டாலின் வாயிலே உழுந்து எழுந்திட்டேங்களே
Rate this:
Share this comment
Cancel
ராமன் அப்துல்லா - Vizhuppuram,TN,இந்தியா
04-ஜன-201809:24:02 IST Report Abuse
ராமன் அப்துல்லா ரஜினிகாந்த், கருணாநிதியுடன் மட்டுந்தான் ஆசியா? மோடி, தமிழிசை,இல கணேசன், பப்பு ராகுல், எடப்பாடி, பன்னீர், தினகரன், சசிகலா, சிதம்பரம், சாமி மற்றும் எச் ராஜா போன்றோரிடம் ஆசி வாங்கவில்லையா?
Rate this:
Share this comment
Cancel
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
04-ஜன-201809:20:36 IST Report Abuse
P. Kannan ரஜினி கலைஞரிடம் ஆசிவாங்க வந்தார் என்றே வைத்துக்கொள்வோம், ஸ்டாலினை இவர் சாட்டியது, அதிமுகவை சாடியதை அந்த இரு கட்சியை சார்ந்தவர்களும் மறந்து விடுவார்களா? 2 .0 ,காலா திரைப்படம் திரைக்கு வரும் போது மேற்கண்ட விஷயங்கள் அதில் பிரதிபலிக்காதா? என்ற பயம் கூட இந்த சந்திப்பில் இருக்கலாம். ஆகவே தான் இனி அடுத்த MLA தேர்தல் வரை நானும் ,என் ரசிகர்களும் எந்த விமர்ச்சனத்தையும் யார்மீதும் வைக்கமாட்டோம் என்று ரஜினி கூறியதை கவனத்தில் கொள்ளலாமா? இந்த முழு எபிசோடே அடுத்த படத்தின் ரீலீஸை முன்வைத்தே நடைபெறுகிறதோ என்ற சந்தேகமும் உண்டு. இந்தாளுக்கு ,தான் ஒரு பாபா என்ற எண்ணம் ஆகவே வாயிற்கு வந்ததையெல்லாம் பேசுகிறான், அவை இந்த ஆளை தமிழகத்தை விட்டு ஓடவைக்கும். நுணலும் தன் வாயால் கெடும் அது இவனுக்குத்தான்.
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஜன-201808:50:22 IST Report Abuse
Tamilan திராவிடத்தை திருடிவைத்து அதன் பின்னால் ஒளிந்துகொண்டு காலம் காலமாக அரசியல் செய்யும் கருணாநிதியிடம் திராவிடத்தை பிரித்து விட்டு தமிழை மட்டும் தலையில் கட்டிவிட்டு வரவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
pollachipodiyan - pollachi,COIMBATORE.,இந்தியா
04-ஜன-201808:20:02 IST Report Abuse
pollachipodiyan கண்ணனா, புருஞ்சுக்கிறவனுக்கு, சொல்ல அவசியமுமில்லை, புரியாதவனுக்கு சொல்லி புண்ணியமுமில்லை. உனக்கு ஏதும் புரியுதா? இது எப்படி இருக்கு? கன்றாவியா இருக்குது.
Rate this:
Share this comment
Cancel
04-ஜன-201808:11:11 IST Report Abuse
ஆனந்த் ரஜினி ஒரு பண வெறி பிடித்தவர் நம்பும் கடவுளே அவரை தண்டிப்பார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை