3ம் பருவ பாட புத்தகம் சப்ளை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

3ம் பருவ பாட புத்தகம் சப்ளை

Added : ஜன 03, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மாமல்லபுரம் : மூன்றாம் பருவ பாட புத்தகங்கள், மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.அரசுப் பள்ளிகளில், கல்வியாண்டு துவங்கும் ஜூன் - செப்., வரையிலான முதல் பருவம்; அக்., - டிச., வரை இரண்டாம் பருவம்; ஜன., துவங்கி, ஏப்., மாதம் வரை மூன்றாம் பருவம் என்ற கல்வி முறை, நடைமுறையில் உள்ளது.திறப்புஒவ்வொரு பருவம் துவங்கும்போது, விலையில்லா புத்தகங்கள், குறிப்பேடுகள், மாணவ - மாணவியருக்கு வழங்கப்படுகின்றன.இரண்டாம் பருவ தேர்வு விடுமுறை முடிந்து, பள்ளிகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டு, மூன்றாம் பருவ கல்வி துவங்கியது.இதையடுத்து, மாணவ - மாணவியருக்கு, மூன்றாம் பருவ, விலையில்லா புத்தகங்கள், குறிப்பேடுகள், வழங்கப்பட்டன.சிரமம்ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப் பள்ளிகளை பொறுத்தவரை, இதற்கு முன், ஆசிரியர்களே, உதவி தொடக்ககல்வி அலுவலகம் சென்று, அவற்றை பெறுவதற்கு சிரமப்பட்டனர்.தற்போது, வேனில் புத்தகங்களை ஏற்றி, பள்ளிக்கு அனுப்பி, ஆசிரியர் சிரமத்தை கல்வி துறை தீர்த்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X