வரும், 7ம் தேதி வரை வறண்ட வானிலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வரும், 7ம் தேதி வரை வறண்ட வானிலை

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Weather,வானிலை

'தமிழகம், புதுச்சேரியில், வரும், 7ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும்; மலைப்பகுதிகளில் தரைப்பனி உறையும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், வட கிழக்கு பருவமழை முடிவுக்கு வந்துள்ளது. தற்போது, பனிக்காலம் தீவிரமாகி உள்ளது. வழக்கமாக, டிசம்பர் முதல் பனி பொழியும் என்றும், தமிழ் மாதமான கார்த்திகையில் பனி அடிக்கும் என்றும், மூதாதையர்கள் கூறுவர். அதேபோல், இந்த ஆண்டு பனிக்காலம் தீவிரமாகி உள்ளது.

தமிழகத்தில் குறைந்த பட்சமாக, கொடைக்கானலில், 8 டிகிரி செல்ஷியஸ்; ஊட்டியில், 11 டிகிரி செல்ஷியஸ் என, வெயிலின் அளவு மிக குறைவாக இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையில், 23 டிகிரி செல்ஷியஸ் என, இயல்பை விட, 7 டிகிரி வெப்பம் குறைவாக உள்ளது.

இந்நிலையில், 'ஜன., 7 வரை, நான்கு நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும். 'பனிக்காலத்தை பொறுத்தவரை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், தரையில் பனி உறைந்து காணப்படும். சென்னையில், குறைந்த பட்சம், 22 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும்' என, வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராமன் அப்துல்லா - Vizhuppuram,TN,இந்தியா
04-ஜன-201809:29:12 IST Report Abuse
ராமன் அப்துல்லா சென்னையில் 23 டிகிரி,, ஆனால் தென் தமிழகத்தில் வழக்கத்தை விட அவிச்சல் அதிகமே.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
04-ஜன-201809:25:56 IST Report Abuse
Lion Drsekar தயவு செய்து இங்கு பணியாற்றும் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பினால் நாட்டுக்கு பல லட்சம் கோடி பணம் மிச்சமாகும், கடந்த மூன்று நாட்களுக்கு முன்னால் இந்த துறை அதிகாரி கூறிய செய்தி தமிழகத்தில் இன்னமும் இரு தினங்களில் மழை பொழியும், இன்றைக்கு வறண்ட வானிலை என்கிறார்கள், வேலைவாய்ப்பு தரவேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கவேண்டுமா? இதற்குப் பதிலாக வெளிநாட்டில் காட்டப்படும் வானிலை அறிக்கையை நேரடியாக ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளியிட்டு வந்தாலே போதுமே .வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஜன-201808:48:45 IST Report Abuse
Tamilan வானிலை வறண்டாலும் சுரண்டுவதற்கு பஞ்சமில்லை .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை