ஏப்ரலில் உள்ளாட்சி தேர்தல்? Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஏப்ரலில் உள்ளாட்சி தேர்தல்?

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், நேற்று சென்னையில் நடந்தது. கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் பேசும்போது, 'ஏப்ரல் மாதத்திற்குள், உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது.அதற்கு, நாம் தயாராக வேண்டும்.

எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், தங்கள் தொகுதியில், மக்கள் பணி செய்ய வேண்டும்' என, தெரிவித்துள்ளனர்.மேலும், 'உள்ளாட்சி தேர்தலில், தினகரனையும், தி.மு.க.,வையும் தோல்வி அடையச் செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலில், தினகரனால், வார்டுக்கு ஒரு சின்னம் என, போட்டியிடமுடியாது.

ஏப்ரலில் உள்ளாட்சி தேர்தல்?

எனவே, அவரால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. தி.மு.க., நிலைமையும் மோசமாக உள்ளது. இந்த வாய்ப்பை, நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

'நமது அம்மா' நாளிதழ்!

அ.தி.மு.க.,வின் பத்திரிகையாக இருந்த, 'நமது எம்.ஜி.ஆர்.,' தற்போது, சசிகலா குடும்பத்தினர் வசம் உள்ளது. எனவே, அ.தி.மு.க.,விற்காக, அக்கட்சி பேச்சாளரான, நடிகர் ஜெயகோவிந்தன் வசம் உள்ள, 'நமது அம்மா' பத்திரிகையை பெற்று நடத்த, பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளனர். அதேபோல், 'அம்மா டிவி' என்ற பெயரில், புதிய, 'டிவி' ஒன்றை துவக்கவும் முடிவு செய்துள்ளனர். 'நமது எம்.ஜி.ஆர்.,' நாளிதழ் ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ், 'நமது அம்மா' பத்திரிகை ஆசிரியராக நியமிக்கப்பட உள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.

- நமது நிருபர் -

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatesh - coimbatore,இந்தியா
04-ஜன-201821:08:25 IST Report Abuse

venkateshவோட்டு கேட்டு வரும்போது மக்கள் கேட்கும் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.உங்களுக்கு ஆப்பு தயார்..

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-ஜன-201816:58:49 IST Report Abuse

Pugazh Vசீக்கிரம் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கவும், ஒரு மொபைல் வாங்க வேண்டும் அல்லது அட்லீஸ்ட் ஒரு சைக்கிளாவது வாங்கணும்.

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
04-ஜன-201808:29:13 IST Report Abuse

balakrishnanஎல்லாம் சரி, முதலில் நீங்கள் தயாராக இருக்கின்றீர்களா, அது தான் முக்கியம், பணம் இருக்கு ஆனால் தொண்டர்கள் பலம் இருக்கா, அதிகாரம் இருக்கு, ஆனால் மக்கள் செல்வாக்கு இருக்கா,

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
04-ஜன-201808:00:18 IST Report Abuse

தேச நேசன் தேர்தலை அரசியல் கட்சியடிப்படையில் நடத்தாமல் விட்டுவிடுவார்கள் எல்லோருக்குமே சுயேச்சை சின்னம் என்றால் அதிமுக தப்பிவிடும்

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
04-ஜன-201807:38:19 IST Report Abuse

தங்கை ராஜாநீதி மன்றம் நியாயமான தீர்ப்பை விரைந்து தந்தால் வரும் சட்ட மன்ற கூட்டத்தொடரிலேயே அமாவாசைகளின் ஆட்டம் குளோஸ். கவர்னர் ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியுமா.. ..

Rate this:
kuthubdeen - thiruvarur,இந்தியா
04-ஜன-201811:55:19 IST Report Abuse

kuthubdeenஎன்ன நியாயமான தீர்ப்பை எதிர் பார்க்கிறீர்கள் ..உங்களுக்கு சாதகமா வந்தால் அது நியாயமான தீர்ப்பா ?மக்கள் திமுகவை சென்ற தேர்தலில் புறக்கணித்ததுதானே உண்மை ...அவனுவ குடும்ப சண்டை ...அதை அவர்கள் சரி பண்ணி கொள்வார்கள் ....

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
04-ஜன-201804:10:42 IST Report Abuse

Kasimani Baskaranஅம்மா ஊழல் பத்திரிக்கை, அம்மா ஊழல் டிவி போன்று ஆரம்பிக்கலாம்... அமைச்சர் பெருமக்களின் ஆதரவு தொடர்ந்து இருக்கும்...

Rate this:
Rajan - chennai,இந்தியா
04-ஜன-201803:13:38 IST Report Abuse

Rajanஅப்போ உள்குத்துக்கு ரெடியா? திருடர்கள் திருடும்போது ஒருமையாய் இருப்பார்கள்.. பங்குபோடும்பதுதான் காமெடி

Rate this:
skv - Bangalore,இந்தியா
04-ஜன-201803:12:11 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>கோவிந்தா கோவிந்தா EPS OPS கோவிந்தா TTV கோவிந்தா மக்களே எவன் காசுத்தறானோ அவனுக்கு போடுங்கய்யா வோட்டு தரலேன்னா போடுங்கய்யா வேட்டு

Rate this:
அன்பு - தஞ்சை,இந்தியா
04-ஜன-201802:39:16 IST Report Abuse

அன்புகவலை படாதீர்கள். ஏப்ரல் இல் 234 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தலே வர போகிறது. அப்போது சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ரெண்டையும் சேர்த்தே நடத்தி விடலாம். ரெண்டு ஆண்டுகள் வரை தாக்கு பிடித்து, பாராளுமன்ற தேர்தலுடன் நடத்துவார்கள் என்று தான் எண்ணினேன். பாராளுமன்ற தேர்தல் வருவதற்கு முன்னரே, சட்டமன்ற தேர்தலும் உள்ளாட்சி தேர்தலும் வரப்போகிறது. ரஜினி கட்சிக்காரர்கள் ரெடியாக வேண்டியது தான். போர் துவங்க போவதால் தான், ரஜினியே போட்டிக்கு வந்துள்ளார்.

Rate this:
ramasamy naicken - Hamilton,பெர்முடா
04-ஜன-201801:27:30 IST Report Abuse

ramasamy naickenஒரு வேளை உள்ளாட்சி தேர்தல் வரும் ஏப்ரலில் நடந்தால், மே மாதம் இந்த ஆட்சி காலி ஆகிவிடும். படு தோல்விக்கு பிறகு அங்கெ இருக்க எம் எல் ஏக்களுக்கு பைத்தியமா பிடித்து இருக்கின்றது. விரைவில் அதிமுக சுத்தமாக அழிந்து விடும்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement