Ariviyalmalar | அத்துமீறலை காட்டி தரும், 'ஆப்'| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

அத்துமீறலை காட்டி தரும், 'ஆப்'

Added : ஜன 03, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அத்துமீறலை காட்டி தரும், 'ஆப்',Ariviyalmalar

அமெரிக்க அரசின் வெளியுறவு ரகசியங்களை கசிய விட்ட, எட்வர்ட் ஸ்னோடன், இப்போது ஒரு மொபைல், 'ஆப்'பை வெளியிட உதவி இருக்கிறார். 'ஹெவன்' என்ற இந்த ஆப், எந்தவொரு ஆண்ட்ராய்டு மொபைலையும், பிறரது கண்காணிப்பில் இருந்து தப்பிக்க உதவும்
என்கிறார், ஸ்னோடன்.
பத்திரிகை சுதந்திரத்திற்கான அமைப்பு, கார்டியன் நாளிதழ் ஆகியவற்றின் நிதி ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட இந்த, 'ஆப்'பை தரவிறக்கம் செய்த, ஆண்ட்ராய்டு போனின் கேமரா, மைக் மற்றும் அசைவுகளை உணரும் ஆக்சலரோமீட்டர் ஆகியவற்றை பயன்படுத்துகிறது. 'ஹெவன் ஆப்' உள்ள மொபைலின் உரிமையாளரை தவிர, வேறு யாராவது போனை எடுத்தால் கண்டுபிடித்துவிடும். உரிமையாளர் மொபைலை தங்கும் விடுதியில் வைத்து வெளியே போயிருக்கும் போது, யாராவது அத்துமீறி அதை எடுத்தால், அவரது புகைப்படம், அவர் அங்கே பேசிய பேச்சு எல்லாமே, அந்த மொபைலில் பதிவாவதோடு, உரிமையாளரின் இன்னொரு மொபைலுக்கு, அந்த புகைப்படங்களையும், ஒலித் துணுக்குகளையும் இணையம் மூலம் அனுப்பிவிடும்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை