ஜெ., உடலை, 'எம்பார்மிங்' செய்த பெண் டாக்டரிடம் கமிஷன் விசாரணை Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ., உடலை, 'எம்பார்மிங்' செய்த பெண் டாக்டரிடம் கமிஷன் விசாரணை

சென்னை : ஜெ., உடலை, 'எம்பார்மிங்' செய்த மருத்துவர், சுதா சேஷய்யன், விசாரணை கமிஷனில் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.

A.D.M.K,Jayalalithaa,அ.தி.மு.க,ஜெயலலிதா


ஜெ., மரணம் குறித்து விசாரித்து வரும், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன், சென்னை மருத்துவக் கல்லுாரி உடற்கூறியல் தலைவர், சுதா சேஷய்யன், நேற்று ஆஜரானார். இவர் தான், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் இறந்த, ஜெயலலிதாவின் உடல் கெடாமல் இருப்பதற்காக, 'எம்பார்மிங்' செய்தவர்.

அதனால், விசாரணைக்கு ஆஜராகும்படி,

அவருக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டிருந்தது.அதன்படி, நேற்று காலை, 10:30 மணிக்கு ஆஜரான சுதாவிடம், இரண்டு மணி நேரம் விசாரணை நடந்தது.'எதற்காக ஜெ., உடல், எம்பார்மிங் செய்யப்பட்டது; அதற்கு எவ்வளவு நேரமானது; எம்பார்மிங் செய்ய உத்தரவிட்டது யார்; எம்பார்மிங் செய்தபோது, ஜெ.,வின் கால்கள் இருந்தனவா' என, பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு, சுதா சேஷய்யன் பதில் அளித்துள்ளார்.

விசாரணை முடிந்த பின், சுதா சேஷய்யன் கூறியதாவது: ஜெ.,உடல், 2016 டிச., 5 இரவு, எம்பார்மிங் செய்யப்பட்டது குறித்து கேட்டனர்; விளக்கம் அளித்தேன். உண்மையை உள்ளபடி தெரிவித்தேன்.இயந்திரம் வைத்து செய்யும் போது, எம்பார்மிங்கிற்கு, 15 முதல், 20 நிமிடங்கள் போதும். மருத்துவமனையில் ஜெ., இருந்தபோது, நான் பார்க்கவில்லை; அவர் மரணத்திற்கு பின் தான் பார்த்தேன்.

இறப்பு சான்றிதழ் வழங்கிய பின்னரே, மருத்துவமனைக்கு சென்றேன். டிச., 5 இரவு, 10:30 மணிக்கு, எனக்கு போன் வந்தது. இரவு, 11:45 மணிக்கு, மருத்துவமனைக்கு சென்றேன். நள்ளிரவு, 12:20 மணிக்கு, எம்பார்மிங் நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


அப்பல்லோவுக்கு அவகாசம்!

ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை, 10 நாட்களுக்குள் தாக்கல் செய்யும்படி, அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, அவரது மகள் பிரித்தா ரெட்டி ஆகியோருக்கு, விசாரணை கமிஷன், சம்மன் அனுப்பி இருந்தது. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்த நிலையில், அப்பல்லோ நிர்வாக வழக்கறிஞர் மஹிபுனா பாட்ஷா, கமிஷனில் ஆஜராகி, கால அவகாசம் கோரினார். அதை ஏற்ற நீதிபதி, வரும், 12க்குள் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.


சிவகுமாருக்கு, 'சம்மன்!'

சசிகலா உறவினரும், ஜெ.,க்கு சிகிச்சை அளித்தவருமான, டாக்டர் சிவகுமார், ஜெ., உதவியாளர் பூங்குன்றன் ஆகியோர் ஆஜராகும்படி, சம்மன் அனுப்ப, விசாரணை கமிஷன் முடிவு செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
05-ஜன-201809:36:38 IST Report Abuse

D.Ambujavalliஇவர் சைவ பக்திக் செம்மல். பொய் சொல்ல மாட்டார் என்றெல்லாம் எதிர்பார்க்கலாமா ? பூச்சு வேலை மெழுகிக் கோலமிட்டார் என்று வைத்துக்கொள்ளலாமா ?

Rate this:
Global Citizen - Globe,இந்தியா
04-ஜன-201823:42:42 IST Report Abuse

Global Citizenலாக் அப் ல டாக்டர் பாலாஜி மற்றும் சுதா சேஷையனை கட்டி வச்சு ரெண்டு அடி போட்டா உண்மை தன்னால வெளிய வரும்.

Rate this:
S. MURALIDHARAN - CHENNAI,இந்தியா
04-ஜன-201823:29:42 IST Report Abuse

S. MURALIDHARAN'எம்பாமிங்' என்ற ஆங்கிலச் சொல்லின் ஸ்பெல்லிங் embalming அது எப்படி 'எம்பார்மிங்' ஆனது? தமிழ் நாளிதழ் என்றால் ஆங்கில டிக்ஷனரி கூட ஆஃபீஸில் இருக்காதா?

Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
05-ஜன-201821:01:02 IST Report Abuse

Sathish அய்யா நக்கீரரே வணக்கம். எங்கிருந்துயா நீங்கெல்லாம் கிளம்பி வர்றீங்க?...

Rate this:
Karthikeyan Krishnan - Tiruchirapalli (Trichy),இந்தியா
05-ஜன-201822:30:10 IST Report Abuse

Karthikeyan Krishnanமுரளிதரன் சொல்வது சரி, இப்படி தவறுதலாக எழுதி எழுதி நாமும் அதனை தவறாக படித்து பிறரிடம் பேசும்போது தவறு சுட்டிக்காட்டப்படுகிறது, எனவே தவறுகளை சரிசெய்து தினமலர் வெளியிட்டால் நன்றாக இருக்கும், இலங்கை தமிழும் அவர்கள் பேசக்கூடிய ஆங்கில வார்த்தைகளும் சிறப்பாக இருக்கும், ஆங்கில வார்த்தைகளை உச்சரிப்புப்படி எழுதுவார்கள்....

Rate this:
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
04-ஜன-201822:07:05 IST Report Abuse

Gokul Krishnanஅப்பல்லோ ரெட்டி இதற்கு முன் தெனாவட்டாக சொன்னானே , விசாரணை எப்போது என்றாலும் தயார் என்று , இப்போது எதற்கு பம்முகிறார் . ஜெயா மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட போது : வெறும் காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறை பாடு , ஆனால் இன்று சட்டம் ஒழுங்கு காரணமாக உண்மையை மறைத்தோம் , சட்டம் ஒழுங்கை பற்றி கவலை பட இவர் யார்

Rate this:
G.Prabakaran - Chennai,இந்தியா
04-ஜன-201820:51:20 IST Report Abuse

G.Prabakaranஆறுமுகசாமியின் விசாரணை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படவேண்டுமெனில் இந்த விசாரணை குறித்து மக்களுக்கு ஒளிவு மறைவு இன்றி விசாரணை கமிசனில் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் தினந்தோறும் தெரியப்படுத்த வேண்டும்.

Rate this:
sundaram - Kuwait,குவைத்
04-ஜன-201817:19:21 IST Report Abuse

sundaramடாக்டர் சிவகுமார் ஜெயாவுக்கு உறவினரா? பெயரைப்பார்த்தால் இருக்க வாய்ப்பில்லை என்பது போல தெரிகிறதே.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
04-ஜன-201816:30:14 IST Report Abuse

Endrum Indian"ஜெ.,வின் கால்கள் இருந்தனவா" இத்ற்கு பதில் என்ன???? அது பதப்படுத்தப்பட்ட உடலா, அப்பொழுதே இறந்த உடலா? என்று ஏன் கேட்கத்தோணவில்லை???

Rate this:
metturaan - TEMA ,கானா
04-ஜன-201816:16:23 IST Report Abuse

metturaanஇது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் , இயற்கை மரணம் என்றால் இதனை பூசி மொழுக வேண்டாமே அனைத்தும் தெளிவாக உடனே ஒப்படைத்திருப்பார்களே

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
04-ஜன-201813:35:24 IST Report Abuse

dandyஜெயா வின் இறுதி கிரியை முடிந்த உடனே மக்கள் உண்மை கேட்டு வீதியில் இறங்கி இருந்தால் நடந்திருப்பது வேறு ..அனால் சோற்று பிண்டங்களுக்கு துணிவு இருக்கவில்லை ..டாஸ்மாக் திரவம் மூளை சிந்திப்பதை நிறுத்தி விட்டது..வெட்கம் வெட்கம்

Rate this:
Indian - Shelton,யூ.எஸ்.ஏ
04-ஜன-201816:41:47 IST Report Abuse

Indianஆம், ஆனால் அந்த டாஸ்மாக்கை ஊற்றி கொடுத்து முட்டாளாக்கியது அந்த A1 அம்மாதான்...

Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
04-ஜன-201817:20:01 IST Report Abuse

Sanny ஆமா ஒன்னும் தெரியாத பாபா, அம்மா ஊத்தினாங்க நீங்க வாயை ஆ, ஆ என்று பிளந்துக்கிட்டு குடிச்சீங்க.அடுத்தவன் வந்து நஞ்சையும் ஊத்துவான் வாயை பிளந்துக்கிட்டு இருங்க. அது தான் RK நகரில் நடக்கபோகுது....

Rate this:
Malaichaaral - Ooty,இந்தியா
04-ஜன-201811:26:38 IST Report Abuse

Malaichaaralஒரு கொலையை மறைக்க விசாரணை கமிஷன்..

Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement