'வர்தா, ஒக்கி' புயலால் ரூ.1,331 கோடி இழப்பு! Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'வர்தா, ஒக்கி' புயலால் ரூ.1,331 கோடி இழப்பு!

வர்தா, ஒக்கி புயலால், 1,331 கோடி ரூபாய்க்கு, மின் சாதனங்கள் சேதமடைந்ததால், இனியாவது, கடலோர மாவட்டங்களில், சீரான மின் சப்ளை பணிகளை, மின் வாரியம் முடுக்கி விடுமா என்ற, எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

சென்னையில், குறிப்பிட்ட சில இடங்கள் தவிர, மற்ற பகுதிகளுக்கு, மின் கம்பம் வாயிலாக, மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. மழை, புயலின் போது, மின் கம்பங்கள் சாய்வதும், மின் கம்பி அறுந்து விழுவதும், விபத்து ஏற்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.

சென்னை மற்றும் புறநகரில், 2016 டிசம்பரில் வீசிய, 'வர்தா' புயல்; 2017 டிசம்பரில், கன்னியாகுமரி யில் வீசிய, 'ஒக்கி' புயலால், பல கோடி ரூபாய் மதிப்பிலான மின் சாதனங்கள் சேதமடைந்தன. வரும் காலங்களில், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை பணிகளை, மின் வாரியம் முடுக்கி விடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எளிதில் சேதம்
இது குறித்து, மின் ஊழியர்கள் கூறியதாவது:தமிழகத்தில், 13 கடலோர மாவட்டங்கள் உள்ளன.அவை தான், மழை, புயலின் போது பெரிதும் பாதிக்கப்படுகின்றன. அந்த மாவட்டங்களில், உப்பு காற்று வீசுவதால், மின் சாதனங்களும் வலுவிழந்து விடுகின்றன.

'வர்தா, ஒக்கி' புயலால் ரூ.1,331 கோடி இழப்பு!

அவற்றை, பொறியாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதனால் தான், மழை, புயலின் போது, சாதனங்கள் எளிதில் சேதமடைகின்றன. புயலின் போது, பாதிப்பு ஏற்படாமல் இருக்க, கடலோர பகுதிகளில், மின் கம்பத்திற்கு பதில், தரைக்கு அடியில், 'கேபிள்' வாயிலாக மின் சப்ளை செய்ய, மின் வாரியம், பல ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்தது.

Advertisementஇதற்கு, உலகவங்கியும் நிதி உதவி வழங்க தயாராக உள்ளது. அத்திட்ட பணிகளை, மின் வாரியம், மந்த கதியில் மேற்கொள்கிறது.இதன் விளைவாக, தற்போது தான், கடலுார், நாகை, வேளாங்கண்ணியில், கேபிள் மின் சப்ளை பணிகள் துவங்கியுள்ளன.புத்தாண்டு துவங்கிய நிலையில், மழை சீசனுக்கு, பல மாதம் அவகாசம் உள்ளது.

எனவே, மழை, புயல் வந்து, சாதனங்கள் சேதமடையும் வரை காத்திருக்காமல், கடலோர பகுதிகளில், சேதமடைந்த சாதனங்களை மாற்றுவது, கேபிள் வாயிலாக மின் சப்ளை செய்வது போன்ற பணிகளை, அதிகாரிகள் முடுக்கி விட வேண்டும்.

தடுக்க முடியாது


இல்லையெனில், வர்தா புயலுக்கு, 1,093 கோடி ரூபாய்; ஒக்கிக்கு, 238 கோடி ரூபாய் என, இரு ஆண்டுகளாக, 1,331 கோடி ரூபாய்க்கு சேதம் ஏற்பட்ட நிலையில், வரும் ஆண்டுகளிலும், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதை தடுக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - coimbatore,இந்தியா
04-ஜன-201808:22:55 IST Report Abuse

balakrishnanunderground cabling tem தான் மிகவும் சிறந்தது, ஆனால் மிகவும் மோசமான நிலையில் மின்சார துறை இயங்கிவருகிறது, நல்ல நிர்வாகம் இருந்தால் தான் எதுவுமே சிறப்பாக இயங்கும், தமிழகமே இப்போது நல்ல நிர்வாகத்துக்கு ஏங்கி தவிக்கிறது

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
04-ஜன-201804:07:36 IST Report Abuse

Kasimani Baskaranமின்சாரம் இலவசமாகவா கொடுக்கிறார்கள்?

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement