ராஜ்யசபா தேர்தலில் 10 இடங்களை பா.ஜ., வெல்ல வாய்ப்பு: பலம் அதிகரிப்பதால் மசோதாக்கள் எளிதில் நிறைவேறும் Dinamalar
பதிவு செய்த நாள் :
வாய்ப்பு!
ராஜ்யசபா தேர்தலில் 10 இடங்களை பா.ஜ., வெல்ல...
பலம் அதிகரிப்பதால் மசோதாக்கள் எளிதில் நிறைவேறும்

ராஜ்யசபாவில், இந்தாண்டில், 66 இடங்கள் காலியாவதால், பா.ஜ.,வுக்கு, மேலும், 10 உறுப்பினர்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ


இதனால், ராஜ்யசபாவில், அரசு சார்பில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் அனைத்தும், எளிதில் நிறைவேறும் சூழ்நிலை ஏற்படும்.ராணுவ அமைச்சராக இருந்த, மனோகர் பரீக்கர், உ.பி.,யில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரது பதவிக்காலம், 2020 நவ., 25ல் முடிகிறது.

கோவாவில் நடந்த சட்ட சபைத் தேர்தலுக்கு பின், அம்மாநில முதல்வராக பொறுப்பேற்ற மனோகர் பரீக்கர், ராணுவ அமைச்சர் பதவியையும், ராஜ்யசபா உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

இதனால், காலியான, ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு, இடைத்தேர்தல் நடத்தப்படும் என, சமீபத்தில், தேர்தல் கமிஷன் அறிவித்தது. வேட்பு மனு தாக்கல் செய்ய, நாளை கடைசி நாள்; 6ம் தேதி, மனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.

இந்த தேர்தலில் போட்டியிட, தனி அதிகாரத்துடன் கூடிய, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை இணையமைச்சர், ஹர்தீப் சிங் புரி, நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.இந்த தேர்தலில், ஹர்தீப் சிங் புரிக்கு போதிய, எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு இருப்பதால், அவர்,


நிச்சயம் வெற்றி பெறுவார் என, கூறப்படுகிறது.இந்தாண்டில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த, 66 ராஜ்யசபா, எம்.பி.,க்களின் பதவிக்காலம்முடிவடைகிறது. தற்போது, பா.ஜ., - காங்., கட்சிகளின், ராஜ்யசபா உறுப்பினர் பலம், சரி சமமாக, 57 ஆக உள்ளது. இந்தாண்டில் காலியாகும், ராஜ்யசபா, எம்.பி.,க்களின் பதவிகளுக்கு நடக்கும் தேர்தலில், பா.ஜ.,வுக்கு கூடுதலாக, 10 உறுப்பினர்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்தாண்டின் இறுதியில், ராஜ்யசபாவில், காங்., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பலம், 72ல் இருந்து, 63 ஆகக்குறையும் என, கணிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில், உ.பி., மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, ஜார்க்கண்ட், உத்தரகண்ட் மாநிலங்களில் நடந்த தேர்தல்களில், பா.ஜ., சிறப்பான வெற்றிகளை குவித்துள்ளதால், அக்கட்சியின், ராஜ்யசபா, எம்.பி.,க்களின் பலம் கணிசமாக அதிகரிக்கும்.

இதனால், பார்லிமென்டில் சட்ட திருத்த மசோதாக்களை நிறைவேற்றுவது, மத்திய அரசுக்கு எளிதாகும். தற்போதைய லோக்சபாவில், ஆளும், பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை இடங்கள் இருந்தாலும், ராஜ்யசபாவில் போதிய உறுப்பினர் பலம் இல்லாததால், பல மசோதாக்களை நிறைவேற்றுவதில், பா.ஜ., அரசு, இடையூறுகளை சந்தித்தது.

இந்தாண்டு இறுதிக்குள், ராஜ்யசபாவில், பா.ஜ., பலம் கணிசமாக அதிகரிப்பதால், மசோதாக்கள் நிறைவேற்றம் எளிதாகும் என, கூறப்படுகிறது.

உ.பி.,யில் காலியாகும் 10 இடங்கள்


நாடு முழுவதும், 16 மாநிலங்களில், ஏப்ரல் மாதத்தில், 59 ராஜ்யசபா, எம்.பி.,க்களின் பதவிகள் காலியாகின்றன. உ.பி.,யில் மட்டும், 10 எம்.பி.,க்களின் பதவிக் காலம் முடிவடைகிறது. உ.பி.,யில், ராஜ்யசபா, எம்.பி., பதவி களுக்கு நடக்கும் தேர்தலில், பா.ஜ.,விற்கு, எட்டு இடங்கள்கிடைக்கும் நிலை உள்ளது.

Advertisement

பீஹாரில், ஆறு ராஜ்யசபா இடங்கள் காலியாகின்றன. இதில், தற்போது, ஐக்கிய ஜனதா தளத்திற்கு, நான்கு இடங்களும், பா.ஜ.,விற்கு, இரண்டு இடங்களும் உள்ளன. இப்பதவிகள் காலியாகும்போது, தற்போது கூட்டணி அமைத்துள்ள இக்கட்சிகள், எம்.பி., இடங்களை பகிர்ந்து கொள்வதில் சிரமம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகுஜன் சமாஜ் தலைவர், மாயாவதியின் ராஜினாமா, தெலுங்கானாவில், காங்., உறுப்பினர், பல்வாய் கோவர்த்தன் ரெட்டியின் இறப்பு, பீஹாரில், ஐக்கிய ஜனதா தளத்தின், அலி அன்வர் அன்சாரி தகுதி நீக்கம் செய்யப்பட்டது,

மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமுல் காங்.,கிலிருந்து வெளியேறி, பா.ஜ.,வில் சேர்ந்த முகுல் ராயின் ராஜினாமா ஆகியவற்றால், காலியான, ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தலும், விரைவில் நடைபெற உள்ளது. ராஜ்யசபா நியமன, எம்.பி.,க்கள் நான்கு பேரின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளது. இதில், மூன்று இடங்களுக்கு, ஏப்ரலிலும், ஓர் இடத்துக்கு, ஜூலையிலும் நியமனம் நடக்க உள்ளது.

ராஜ்யசபாவில் தற்போதைய நிலை

ராஜ்யசபாவில், மொத்த உறுப்பினர் எண்ணிக்கை, 238. இதில், பா.ஜ., - காங்., கட்சிகள், தலா, 57 உறுப்பினர் பலத்துடன் உள்ளன. சமாஜ்வாதி, 18 எம்.பி.,க்களுடன், மூன்றாவது பெரிய கட்சியாக திகழ்கிறது. அ.தி.மு.க.,விற்கு, 13 எம்.பி.,க்களும், திரிணமுல் காங்.,கிற்கு, 12 எம்.பி.,க்களும், பிஜு ஜனதா தளத்திற்கு, எட்டு எம்.பி.,க்களும், மார்க்.கம்யூ.,விற்கு, ஏழு எம்.பி.,க்களும் உள்ளனர்.


- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-ஜன-201821:47:34 IST Report Abuse

Pugazh Vராஜ்யசபா வில் பெரும்பான்மை ? நடுத்தரவர்க்கத்தினர் செத்தானுங்க...

Rate this:
Ravichandran - dar salam ,தான்சானியா
04-ஜன-201821:34:27 IST Report Abuse

Ravichandranராஜ்ய சபாவில் பலம் பெறுவது அவசியம் ஹிந்துக்களை ஏமாற்றும் அணைத்து சட்டவிதிகளை மாற்றவேண்டும் பொது சிவில் சட்டம் கொண்டுவரவேண்டும் ஜாதி மாயை ஒழிக்கப்படவேண்டும் ஒரே ஜாதி சான்று கொடுக்க சட்டம் கொண்டுவந்து ஹிந்துக்களிடையே பிரிவினை அகற்றவேண்டும் பிரித்தாளும் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டு ஓட்டு அரசியலுக்கு பி ஜெ பி சங்கு ஊத வாழ்த்துக்கள்.

Rate this:

ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) பலம் பெறுவது தவறல்ல ... பலம் உள்ளது என்பதற்க்காக மக்களுக்கு எதிராக செயல்படாமல்... மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்....

Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X