Ariviyalmalar | ஆராய்ச்சி மலர்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

ஆராய்ச்சி மலர்

Added : ஜன 03, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஆராய்ச்சி மலர், Ariviyalmalar

குழந்தைகளை இடைவிடாத பதற்றம், தேவையற்ற பயம் இல்லாதவர்களாக வளர்க்க முடியுமா? முடியும் என்கின்றனர், ஆஸ்திரேலியாவின், மக்வாரி பல்கலைக் கழகம் மற்றும் நெதர்லாந்தின், ஆம்ஸ்டர்டாம் பல்கலைக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள். இவர்கள், 312 குடும்பங்களில், எப்படி குழந்தை வளர்ப்பு முறை இருக்கிறது என, ஆராய்ந்தனர்.
இந்த ஆய்வின் முடிவில், குழந்தைகளுடன் பெற்றோர் அடிக்கடி விளையாடுவது, மிதமான ஆபத்துள்ள அல்லது சவாலான செயல்களை செய்யச் சொல்லி ஊக்குவிப்பது போன்றவற்றை, அடிக்கடி செய்த பெற்றோரின் குழந்தைகள், பதற்றம் மற்றும் பயம் போன்ற உணர்வுகள் மிகையாக இல்லாமல் வளருவதாக கண்டறிந்து உள்ளனர்.
நாய் கடிக்கும் எனச் சொல்லாமல், அதைத் தொட்டு பார்க்கவும், அதனுடன் விளையாடவும் ஊக்குவிப்பது, ஊஞ்சல் ஆடுவது போன்றவை, பெற்றோரின் மேற்பார்வையில் நடக்கும் போது, குழந்தை உள்ளம் வெளி உலக ஆபத்துகளுக்கு பழக்கப்படுவதால், இந்த நற்பலன் கிடைப்பதாக, ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை