கோரிக்கை நிராகரிப்பு: ராஜ்யசபாவில், 'முத்தலாக்' ஏற்படுத்திய அமளி Dinamalar
பதிவு செய்த நாள் :
கோரிக்கை நிராகரிப்பு:
ராஜ்யசபாவில், 'முத்தலாக்' ஏற்படுத்திய அமளி

'முத்தலாக்' மசோதாவை, தேர்வுக்குழுவுக்கு அனுப்பியே தீர வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் கடும் அமளியை ஏற்படுத்தியும், அந்த கோரிக்கையை அரசு தரப்பு நிராகரித்துள்ளதால், இன்னும் பரபரப்பு அடங்கவில்லை.

கோரிக்கை நிராகரிப்பு: ராஜ்யசபாவில், 'முத்தலாக்' ஏற்படுத்திய அமளி


முஸ்லிம்களில், மூன்று முறை தலாக் கூறி, விவாகரத்து பெறும் நடைமுறைக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா, சமீபத்தில் லோக்சபாவில் குரல் ஓட்டெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

ஆளும், பா.ஜ., கூட்டணிக்கு, லோக்சபாவில் பெரும்பான்மை இருப்பதால், இந்த மசோதா, எந்த பிரச்னையுமின்றி நிறைவேறியது. ஆனால், ராஜ்யசபாவில், பா.ஜ.,வுக்கும், காங்கிரசுக்கும் சமபலம் இருப்பதால், இங்கு நிலைமை வேறாக உள்ளது.

லோக்சபாவில், மசோதாவை ஆதரித்த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், இங்கு, ஓட்டுப்போட்டே ஆக வேண்டும். ஓட்டெடுப்பு நடந்தால், அது தங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என, மதச்சார்பின்மை பேசும் கட்சிகள் கருதுகின்றன.

ஒத்திவைப்பு


அதே சமயம், மசோதாவை முற்றிலுமாக எதிர்ப்பதிலும் சங்கடங்கள் உள்ளன.இதனால், இம்மசோதாவை ராஜ்யசபா தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைத்து, பின்

பார்த்துக் கொள்ளலாம் என, எதிர்க்கட்சிகள் திட்டமிடுகின்றன.
பா.ஜ.,வோ, இக்கட்சிகளை அம்பலப்படுத்த இதுதான் சமயம் என கருதி, மசோதாவை நிறைவேற்றும் முடிவிலிருந்து பின்வாங்க மறுக்கிறது.இந்நிலையில் தான், மஹாராஷ்டிராவில் ஏற்பட்ட கலவரத்தை மையமாக வைத்து, நேற்று காலையிலிருந்தே, ராஜ்யசபாவில், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அடுத்தடுத்து சபை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் வியூகத்தை உடைக்கும் விதமாக, மதியம் சபை கூடியதும், அரசு தரப்பு, தன் உறுதியை காட்டத்துவங்கியது.

எதிர்ப்பு


மஹாராஷ்டிர கலவரத்தை காரணம் காட்டி, மீண்டும் சபையில் அமளி கிளம்பியும், அதை துணைத் தலைவர், குரியன் சமாளித்தார்.சட்ட அமைச்சர், ரவிசங்கர் பிரசாத்தை அழைக்கவே, அவர், முத்தலாக் மசோதாவை, சபையில் தாக்கல் செய்தார்.

இதையடுத்து, அமளி ஏற்பட்டது. எதிர்க்கட்சித் துணை தலைவர், ஆனந்த் சர்மா, ஒரு தீர்மானத்தை கொண்டு வருவதாக கூறினார். அப்போது அவர் பேசியதாவது:சபை விதிகளின்படி, பெரும்பாலான எதிர்க்கட்சிகள், தீர்மானம் வாயிலாக கோரிக்கை விடுத்தால், அதை ஏற்று, குறிப்பிட்ட மசோதாவை ராஜ்யசபா தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்.

இந்த தீர்மானத்தில் காங்கிரஸ், திரிணமுல், இடதுசாரிகள், அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் ராஜ்யசபா தலைவர்கள் உட்பட, 17 பேர், கையெழுத்தி போட்டு இருப்பதால், இக்கோரிக்கையை ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆனந்த் சர்மாவின் கோரிக்கையை, எதிர்க்கட்சிகளும் வலியுறுத்த துவங்கியதும், மத்திய அமைச்சர்கள், பா.ஜ., -

Advertisement

எம்.பி.,க்கள் ஆகியோர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறியதாவது:சபை விதிகளின்படி, எந்தவொரு மசோதாவையும் தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டுமென வலியுறுத்தினால், அதற்கு, 24 மணி நேரத்திற்கு முன், நோட்டீஸ் தர வேண்டும். ஆனால், தற்போது, சபை கூடியதும், திடீரென சில கட்சிகளின் தலைவர்கள் கூடி, கையெழுத்துப்போட்டு தீர்மானத்தை அளித்தால், அதை ஏற்பதற்கு விதிகளில் இடமில்லை.

வாக்குவாதம்


பார்லிமென்ட் குழுக்கள் முறையாக அமைக்கப்பட்டால் மட்டுமே, அதற்கு அங்கீகாரம். அதற்கு பதிலாக, தாங்களாகவே, ஒரு குழு அமைத்து, தீர்மானம் தந்தால் அதை ஏற்க இயலாது. இந்த மசோதாவை ராஜ்யசபா, எம்.பி.,க்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே, அனுப்பி வைக்கப்பட்டும், அதை ஆராய்ந்து நோட்டீஸ் கொடுக்காமல், இப்போது வந்து, திடீரென அளிக்கும் தீர்மானத்தை ஏற்க முடியாது.

சுதந்திரம் அடைந்ததில் இருந்து, ராஜ்யசபா வரலாற்றில், இதுபோன்ற திடீர் தீர்மானத்தை யாரும் கேள்விப்பட்டதே இல்லை; இது சட்டவிரோதமானது.இவ்வாறு அவர் கூறினார்.

காங்., மூத்த தலைவர், குலாம்நபி ஆசாத், ''ஜனநாயகத்தில் பெரும்பான்மை மட்டும் தான் கணக்கு. பெரும்பாலான, எம்.பி., க்கள், ஒரு விஷயத்துக்காக வலியுறுத்துகிறார் என்றால், அதை அரசு மீற முடியாது,'' என்றார்.

இதையடுத்து, ஆளும் தரப்புக்கும், எதிர்க்கட்சிகள் தரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, கூச்சலும், குழப்பமும் நிலவியதால், சபை, நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
- நமது டில்லி நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohankumar - Trichy,இந்தியா
04-ஜன-201820:51:19 IST Report Abuse

mohankumarமுன்பெல்லாம் பெண் சிசு கொலைக்காக எவ்வெளவு எதிர்த்தார்கள் எவ்வளவு நல்லவர்கள் போல நடித்தார்கள் நீலி கண்ணீர் வடித்தார்கள் அவர்களெல்லாம் இந்த முத்தலாக் விஷயத்தில் வாய் திறக்க மாட்டேன்கிறார்னுன்கள் .எங்கே போய் விட்டார்கள் இந்த award திருப்பி கொடுத்த கும்பல்கள் .

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
04-ஜன-201816:11:17 IST Report Abuse

Endrum Indianஏன் சுன்னத்??ஏன் தலாக் தலாக் தலாக்????ஏன் பெண்களுக்கு புர்கா?? ஏன் கிழ ஆண்கள் எல்லோரும் தொங்கு தாடி??ஏன் வெள்ளை குல்லாய்? ஓரே பதில் முஸ்லிம் அதனால், இன்னும் கேட்டால் குரானில் எழுதியிருக்கின்றது? இன்னும் கேட்டால் முல்லா/இமாம் சொன்னார்? மற்றைய அரபி முஸ்லிம் நாடுகளில் கூட இது இல்லையே என்று கேட்டால் ஜனநாயக மத சார்பற்ற நாடு இந்தியா நாடு ஆகவே இதைப்பற்றி கேள்வி கேட்பது அல்லாவிற்கு எதிரானது, குரானுக்கு எதிரானது என்று பயமுறுத்தல். மத சார்பற்ற நாட்டில் முஸ்லிம் மதத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்றால் எங்களுக்கு சுதந்திரம் இல்லையா என்று கேட்டல்??? நீ அறிவுள்ள முஸ்லிம் தானே இதை ஏன் என்று கேள்வி கேட்டு அதன் உண்மைத்தன்மையை உணர்வது தானே என்று கேட்டால் எல்ல மதத்திலும் இதை போல நிறைய இருக்கின்றன அதை போய் கேள் என்று சொல்லுதல். ஆக மொத்தம் எனது மூளை ஆடு/மாடு மூளை போல்த்தான் உள்ளது என்று சொல்லாமல் சொல்கின்றது போல இருக்கின்றது இவர்கள் செய்கை????ஏன்? எதற்கு? இதனால் ஆய பயன் என்ன? மற்ற மதத்தில் இல்லாத போது நம் மதத்தில் மட்டும் ஏன் என்று எப்போது இந்த முஸ்லிமக்ள் கேள்வி கேட்கின்றார்களோ அப்பொழுது தான் முஸ்லிம் மதம் ஒரு சிறந்த மதம் என்று சிலாகிக்கப்படும். அது வரை முஸ்லிம் மதத்தை சேர்ந்தவன் என்றால் அவன் மூடன், முட்டாள், முரடன், மூர்க்கன் என்றே அறியப்படுவான். ஃபோனில் அல்லது வாட்ஸப்பில் தலாக் தலாக் தலாக் என்று சௌதியிலிருந்து ஹைதெராபாதில் உள்ள பொண்டாட்டி அடிமைக்கு சொல்வானாம், அது விவாகரத்து ஆகி விடுமாம். இதை சப்போர்ட் செய்யுமாம் காங்கிரசும், மற்ற கட்சிகளும்?????????? கிஞ்சித்தளவேனும் அறிவு இருக்கின்றதா இந்த கட்சிகளுக்கு???வெறும் வோட்டு வங்கிக்காக இந்த சப்போர்ட்???

Rate this:
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
04-ஜன-201817:16:05 IST Report Abuse

Mohamed Ilyasஅகோரிகள் இறந்த மாமிசத்தை ஏன் தின்கிறான் , சந்நியாசியின் அம்மணமாக ஏன் வளம் வருகிறாராம் அவர்களின் மர்ம உறுப்பை தொட்டு பெண்கள் ஏன் மரியாதை செலுத்துகிறார்கள் , சாமியார் எல்லாம் பெண்கள் விஷயத்தில் மோசமாக இருக்கிறார்கள் , பதில் சொல்லவும்...

Rate this:
தலித் கறுப்பன் - chennai,இந்தியா
04-ஜன-201819:29:55 IST Report Abuse

தலித் கறுப்பன் அகோரிகள் இறந்த மாமிசத்தை தின்பதால் பிறருக்கு எந்த கெடுதலும் இல்லை. ஆதலால் இதை முத்தலாக்குடன் ஒப்பிட முடியாது. இன்று முஸ்லீம் பெண்களாய் இருப்பவர்கள் நேற்று இந்து சகோதரியாய் இருந்தவர்கள்தானே அவர்கள் நலத்தை புறக்கணிக்கமுடியாது....

Rate this:
Rahim - Riyadh,சவுதி அரேபியா
05-ஜன-201811:01:21 IST Report Abuse

Rahimமுதலில் இந்து சகோதரிக்கு இருக்கும் எத்தனையோ அடிமை தனத்தை மாற்று , குஜராத்தில் நியாயம் கேட்டு காத்திருக்கும் இஸ்லாமிய பெண்களின் மீது அக்கறை வை , அப்புறம் பேசலாம் இஸ்லாமிய பெண்களின் மேல் உனக்கு இருக்கும் பாசத்தை பற்றி. என்ன ரெடியா ?...

Rate this:
Rahim - Riyadh,சவுதி அரேபியா
05-ஜன-201811:10:01 IST Report Abuse

Rahimஎன்றும் நொண்டியன் , காவி பாவியே எதற்கெடுத்தாலும் குர்ஆனில் சொன்னதாக பேசும் அத்தனை பேருக்கும் கேட்கிறேன் எந்த இடத்தில குர்ஆனில் நீங்கள் சொல்லும் அபத்தங்கள் இருக்கிறது என்று சொல்ல முடியுமா ? அப்படி காட்டமுடியவில்லை என்றால் முச்சந்தியில் வைத்து செருப்பால் அடி வாங்க ரெடியா ? சொல்லுங்கப்பா...

Rate this:
Rajathiraja - Coimbatore,இந்தியா
04-ஜன-201814:37:08 IST Report Abuse

Rajathirajaமுத்தலாக் நடைமுறையில் முஸ்லிம்கள் இந்தியாவில் விவாகரத்து செய்ய இயலாது என்பதே போதும். முத்தலாக் கூருவது கிரிமினல் குற்றம் என்பது முஸ்லீம்களை வஞ்சிப்பதுபோல் உள்ளது. கிரிமினல் குற்றம் எனபதால் முஸ்லீம் பெண்கள் இதை தவறாக பயன் படுத்தவர்கள் என்பது மிக பெரிய ஐயம்.

Rate this:
Rahim - Riyadh,சவுதி அரேபியா
05-ஜன-201811:11:44 IST Report Abuse

Rahimஇதே கருத்தை தான் அனைவருமே சொல்கிறார்கள் ஆனால் இதை வைத்து சில நச்சு பாம்புகள் விஷத்தை கக்குகின்றன , ஆயிரம் விஷங்கள் எங்களை தீண்டினாலும் உங்களை போன்ற மருந்துகள் எங்களை காக்கும் என்பதில் சந்தேகம் இல்லை ....

Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)