லாலுவுக்கு தண்டனை நாளை தெரியும் Dinamalar
பதிவு செய்த நாள் :
கால்நடை தீவன ஊழல்,Cattle feed scam, சி.பி.ஐ.,CPI,ராஷ்ட்ரீய ஜனதா தளம் , Rashtriya Janata Dal, லாலு பிராத் யாதவ்,Lalu Prasad Yadav, தேஜஸ்வி யாதவ், Tejaswi Yadav,முதல்வர் நிதிஷ் குமார் , Chief Minister Nitish Kumar, சிறை தண்டனை, Prison,  பீஹார் ,Bihar,ஜார்க்கண்ட், Jharkhand,

ராஞ்சி : கால்நடை தீவன ஊழல் வழக்கில், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தால், குற்றவாளி எனஅறிவிக்கப்பட்டுள்ள, பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான, லாலு பிராத் யாதவ், 69, மற்றும், 15 பேருக்கு, இன்று தண்டனை அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் நாளை (5ம் தேதி ) அறிவிக்கப்படும் என கோர்ட் தெரிவித்துள்ளது.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 1994 - 96 வரை, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர், லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்தார்.அவரது ஆட்சிக் காலத்தில், கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதாக, போலிபில்கள் தயாரித்து, ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கு, ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. கால்நடை தீவன ஊழல் தொடர்பாக, பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அதில், ஒரு வழக்கில், 2013ல் தீர்ப்பளிக்கப்பட்டது. லாலு பிரசாத்தை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவருக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
சில மாதங்கள் சிறையில் இருந்த லாலு, பின், ஜாமினில் வெளி வந்தார்.'இது தொடர்பான, மேலும் நான்கு வழக்குகளையும், லாலு சந்திக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து நடந்த விசாரணையில், பீஹாரின் தியோகர் மாவட்ட கருவூலத்தில், 89.27லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், லாலு மற்றும், 15 பேரை, குற்றவாளி என அறிவித்து, சமீபத்தில், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சிவ்பால் சிங் தீர்ப்பளித்தார்.

நீதிமன்றத்தில் ஆஜர்


அவர்களுக்கான தண்டனை, ஜன., 3ல் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி கூறினார். இந்த வழக்கில், பீஹார் முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, ஜகன்னாத் மிஸ்ரா உட்பட, ஆறு பேர் விடுவிக்கப்பட்டனர்.குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட, லாலு பிரசாத் உட்பட, 16 பேரும் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


கால்நடை தீவன ஊழல்,Cattle feed scam, சி.பி.ஐ.,CPI,ராஷ்ட்ரீய ஜனதா தளம் , Rashtriya Janata Dal, லாலு பிராத் யாதவ்,Lalu Prasad Yadav, தேஜஸ்வி யாதவ், Tejaswi Yadav,முதல்வர் நிதிஷ் குமார் , Chief Minister Nitish Kumar, சிறை தண்டனை, Prison,  பீஹார் ,Bihar,ஜார்க்கண்ட், Jharkhand,


தண்டனை அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டதால், குற்றவாளிகள் அனைவரும், நேற்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். எனினும், வழக்கறிஞர்கள் இருவரின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தி, நேற்று முழுவதும், நீதிமன்ற நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன.

இதையடுத்து, குற்றவாளிகள் அனைவரும், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். லாலு உட்பட, 16 பேருக்கான தண்டனை விபரம், இன்று அறிவிக்கப்பட உள்ளது.தண்டனை அறிவிப்பால், லாலுவின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடலாம் என்பதால், பீஹார் மற்றும் ஜார்க்கண்டின் முக்கிய பகுதிகளில், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.லாலுவுக்கு எதிராக, இன்னும், மூன்று வழக்குகளின் விசாரணை, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

தேஜஸ்விக்கு, 'நோட்டீஸ்'


லாலு பிரசாத்தை குற்றவாளி என அறிவித்த, சி.பி.ஐ., நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்து பேசிய, லாலு மகனும், பீஹார் முன்னாள் துணை முதல்வருமான, தேஜஸ்வி யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தள மூத்த தலைவர்கள்...ரகுவன்ஸ் பிரசாத் சிங், சிவானந்த் திவாரி, காங்கிரசைச் சேர்ந்த, மனீஸ் திவாரி உள்ளிட்டோர், நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக, அவர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (14+ 22)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
james - london,யுனைடெட் கிங்டம்
04-ஜன-201820:07:20 IST Report Abuse

jamesஎன்னுங்க நீதிபதி பேரு குமாரசாமியா? அப்படினா இப்பயே நான் தீர்ப்பு சொல்லுறேன்

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
04-ஜன-201815:42:27 IST Report Abuse

Endrum Indianஇந்திய கோர்ட் தானே, 2 ஜி தீர்ப்பு மாதிரி தானிருக்கும் " கால்நடைகள் யாரும் ஊழல் நடந்ததற்கான ஆதார பூர்வமாக ஏதும் கொடுக்காததினால், லாலு பிரசாத் குற்றமற்றவற்றவர் என்று தீர்ப்பு வழங்கப்படுக்கின்றது"

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-ஜன-201814:01:13 IST Report Abuse

தமிழ்வேல் தீவனத்தையே திங்கட்டும், கொழுப்பும் கரையும் உடம்பும் இளைக்கும். .

Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
04-ஜன-201813:18:03 IST Report Abuse

s.rajagopalanதீர்ப்பு எழுதுவது நாம் போடும் கமெண்ட் போல் விளையாட்டல்ல. அதில் ஒரு சிறு தவறு இருந்தாலும் அதனை ஊதி பெரிதாக்கி நம் வக்கீல்கள் குற்றவாளியை தப்ப வைத்துவிடுவார்கள். தாமதமானாலும் பிழையில்லாமல் சொல்வதுதான் முக்கியம்.

Rate this:
Meenu - Chennai,இந்தியா
04-ஜன-201811:49:31 IST Report Abuse

Meenu2G வழக்கில் மட்டும் எப்படி சி பி ஐ கோட்டை விட்டது? அப்பீல் என்னாச்சு?

Rate this:
sundaram - Kuwait,குவைத்
04-ஜன-201817:22:54 IST Report Abuse

sundaram2G வழக்கில் சி பி ஐ கோட்டை விட்டதாக யார் சொன்னது? எப்படி தீர்ப்பு இருக்கவேண்டும் என்பதை கோபாலபுர சந்திப்பின்போது முடிவெடுத்துவிட்டனர். அதன்படி தீர்ப்பு வந்தது. இதற்கும் சி பி ஐ க்கும் என்ன தொடர்பு?...

Rate this:
04-ஜன-201811:28:10 IST Report Abuse

ushadevanதப்பித்த விலங்குகள். தப்பிக்க முடியாத விலங்குடன் லாலு ஜி. Thank god.

Rate this:
K.Rajasekaran - chennai,இந்தியா
04-ஜன-201810:52:10 IST Report Abuse

K.Rajasekaran எல்லோருக்கும் கருணாநிதியின் ராஜதந்திரம் வருமா? இப்படித்தான் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள்.

Rate this:
Prabaharan - nagercoil,இந்தியா
04-ஜன-201810:37:38 IST Report Abuse

Prabaharanஎல்லா ஊழல்வாதிகளையும் பாரபட்சம் இல்லாமல் தண்டிக்க வேண்டும். அதிகப்படியான சொத்தை பறிமுதல் செய்ய வேண்டும். ஆளும்கட்சி எதிர்க்கட்ச்சி என வித்தியாசம் இருக்க கூடாது. அது நடைமுறைக்கு வருமா ?

Rate this:
Murugan - Mumbai  ( Posted via: Dinamalar Windows App )
04-ஜன-201810:00:17 IST Report Abuse

Muruganசீக்கிரம் தண்டனை கொடுங்க சார் தமிழ் சினிமா டீவி சீரியல் போல இந்த வழக்கு நீண்டுகொண்டே போகிறது

Rate this:
ராமன் அப்துல்லா - Vizhuppuram,TN,இந்தியா
04-ஜன-201809:31:53 IST Report Abuse

ராமன் அப்துல்லாமுதல்மந்திரியாக இருந்தபோது ஊரை அடித்து உலையில் போட்டு வாழ்ந்திருக்கிறார்,இவருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கவேண்டும்.அப்போது தான் இவரை போன்ற ஊழல் முதல்வர்கள் இனி உருவாகாமல் இருப்பார்கள்.

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement