ஜெ., வீட்டை கையகப்படுத்தும் பணி 4 மாதங்களில் முடிக்க அரசு முடிவு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ., வீட்டை கையகப்படுத்தும் பணி
4 மாதங்களில் முடிக்க அரசு முடிவு

சென்னை, போயஸ் கார்டனில், ஜெ., வசித்த வீட்டை கையகப்படுத்தும் பணியை, நான்கு மாதங்களுக்குள் முடிக்க, மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

A.D.M.K,Jayalalithaa,அ.தி.மு.க,ஜெயலலிதா


'ஜெ., வசித்த, 'வேதா நிலையம்' நினைவு இல்லமாக மாற்றப்படும்' என, 2017 ஆக., 17ல், முதல்வர் பழனிசாமி அறிவித்தார். கடந்த மாதம், 30ம் தேதி காலை, சென்னை மாவட்ட கலெக்டர், அன்புச்செல்வன் தலைமையில், வருவாய் துறை அலுவலர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர், ஜெ., வீட்டில் தணிக்கை மேற்கொண்டனர்.

போயஸ் கார்டனில் உள்ள, இரண்டு அறைகளை, வருமான வரித்துறை அதிகாரிகள், 'சீல்' வைத்துள்ளதால், அங்கு மட்டும் ஆய்வு மேற்கொள்ளப் படவில்லை. புல தணிக்கை முடிந்த நிலையில், அடுத்த கட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளன.இது குறித்து, சென்னை கலெக்டர் அன்புச்செல்வன் கூறியதாவது: ஜெ., வீட்டை கையகப்படுத்தும்படி, அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்காக, அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து, கூட்டு புல தணிக்கை மேற்கொண்டோம்.

தமிழ்நாடு நிலம் கையகப்படுத்தும் சட்டம் - 2013ன் கீழ், நிலத்தை கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணியை, நான்கு மாதங்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். மதிப்பீடு முடிவு செய்யப்பட்ட பின், நிலம் கையகப்படுத்தப்படுவது குறித்து, அறிவிப்பு வெளியிடப்படும்.

தற்போதைய நிலையில், ஜெ.,க்கு நேரடி வாரிசுகள் யாரும் கிடையாது. இரண்டாம் நிலை வாரிசுகள், நீதிமன்றம் சென்று, உரிய உத்தரவு பெற வேண்டும். அவ்வாறு உத்தரவு பெற்றால், நிலத்திற்குரிய இழப்பீடு தொகை, அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

இல்லையெனில், இழப்பீடு தொகையை நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு, நிலத்தை கையகப் படுத்துவோம். நிலம் கையகப்படுத்தப்பட்ட

Advertisement

பின், அடுத்த கட்ட நடவடிக்கைகளை, அரசு முடிவு செய்யும்.

போயஸ் கார்டன் இல்லத்தில், வருமான வரித்துறை வசம் உள்ள, இரண்டு அறைகளை இன்னமும் மதிப்பீடு செய்யவில்லை. அதை மதிப்பீடு செய்ய வேண்டும் என, அவர்களிடம் கோரியுள்ளோம். அவர்கள், அவகாசம் கேட்டுள்ளனர். அந்த அறைகளின் நீளம், அகலம், தரையில் பதிக்கப்பட்டுள்ள கற்கள் போன்ற விபரங்கள் தேவை. அனுமதி கிடைத்ததும், அந்தப் பணியை நிறைவேற்றிவிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
05-ஜன-201808:35:37 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>சந்தியாம்மா தன் பொண்ணுக்கு ஏதாச்சும் இருக்கட்டும்னு வீட்டைக்கட்டினாக ஸசி நடராசன் வீட்டை ஸ்வாஹா பண்ணைப்பார்த்து எல்லாம் போச்சு மன்னார்குடிக்கு பட்டநாமம், நியாபக இல்லம் வேண்டாம் பெரியாதா இருக்கு ஹாஸ்பிடல் ஆக்கிடலாம்

Rate this:
Mohamed Umar Sharif. A - Nagapattinam,இந்தியா
04-ஜன-201823:25:27 IST Report Abuse

Mohamed Umar Sharif. Aமறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இல்லம் அரசுடமை ஆக்க படவேண்டும். அதற்கான நடவடிக்கையில் தற்போதைய தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருவது பாராட்ட தக்கது. இது சம்மந்தமாக என்னுடைய கருத்தை ட்விட்டர் கணக்கில் 21 - 11 - 2017 அன்று பதிவிறக்கம் செய்து இருக்கிறேன். Tweeter Account : @memberbjptn2016 மேலும் அவர் பெயரில் உள்ள அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்ய படவேண்டும். அனைத்தும் அரசுடமை ஆக்கப்படமேயானால் சால சிறந்தது.

Rate this:
JAYABALAN R - MIYAPUR, HYDERABAD.,இந்தியா
04-ஜன-201821:48:06 IST Report Abuse

JAYABALAN Rஒரு ஊழல்வாதி மக்களை ஏமாற்றி கோடிகளை சேர்த்த வீட்டை அரசாங்க பணத்தை செலவழித்து அபகரிப்பது தவறு. தேவையானால் அதிமுக கட்சியின் பணத்தை கொடுத்து வாங்கலாம். மக்கள் பணம் மக்களின் தேவைக்காக மட்டுமே செலவு செய்ய வேண்டும். இந்த அரசியல் வாதிகளை யார் கண்டிப்பது ?

Rate this:
venkatesh - coimbatore,இந்தியா
04-ஜன-201820:33:15 IST Report Abuse

venkateshஒரு ஊழல்வாதிக்கு நினைவு இல்லம் அமைக்க அரசு எந்திரம் எவ்வளவு சுறு சுறுப்பாக வேலை செய்கிறது மக்களின் பிரச்னையிலும் இந்த வேகம் இருந்தால்.

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
04-ஜன-201808:19:29 IST Report Abuse

தேச நேசன் தீபக் கோர்ட்டுக்குப் போய் வாரிசு சான்றிதழ் கேட்டார் வட்டாட்சியரிடம் போய்க்கேள் என்றது . வட்டாட்சியரிடம் போய்க்கேட்டார் . இல்லை கோர்ட்டுக்குப்போ என்றாராம் போக்கிடமின்றி அலைகிறாராம் தீபா வாயை அடைக்க அவர் போலீசில் தனது அலுவலகம் தாக்கப்பட்டதாக பொய்ப்புகார் அளித்ததாக கிரிமினல் வழக்குதொடர முயற்சிக்கிறார்கள். போதாததற்கு மன்னார்குடி கும்பல் புதிதாக கர்நாடகாவிலிருந்து போலி மகள்களை வழக்கு தொடரவைக்கிறார்கள் இதெல்லாம் நமது நாட்டில் நடக்கும் நாடகங்கள் (உண்மையில் ஜெயா ஸ்ரீரங்கத்துக்காரரில்லை அவரது தாத்தா காலத்தில் ஆந்திரா நெல்லூரிலிருந்து அரசுப்பணிக்காக கர்நாடகாவுக்குப் போன தமிழ்க்குடும்பம் இதனை அரசியலுக்கு வருமுன்பு எழுதிய அவரது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார் விசாரித்தபோது அது உண்மையென தெரிகிறது)

Rate this:
skv - Bangalore,இந்தியா
05-ஜன-201821:27:00 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>அயே நீர் வேற சசி பெரு ஜெயமட்டும் இல்லீங்க அவ உறவுகள் எல்லார் வீட்டுலேயுமே கூட லிஸ்ட்லே இருக்கலாம்...

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
04-ஜன-201808:11:40 IST Report Abuse

தேச நேசன் ஜெயா குடும்ப ரேஷன் கார்டில் சசி பெயர் பல காலமாக இருப்பதை வைத்து அனுபோக பாத்தியதை கோர முயற்சித்தார்களாமே

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
05-ஜன-201800:30:00 IST Report Abuse

தமிழ்வேல் அப்போ, அந்த 25 கிலோ இலவச அரிசியை கூட விடலியா ?...

Rate this:
skv - Bangalore,இந்தியா
05-ஜன-201818:14:01 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>நீரென்ன நெனைச்சீங்க சசியா இலவசமா எதுகிடைச்சாலும் வாங்கிக்க அந்தபொம்பளே ரெடியா இருந்தா மேலும் முதல்வராயிட்டா தமிழ்நாட்டையே விற்றும் காட்டிருப்பா ஆனால் அந்தக்கடவுள் பொட்டகணக்கு வேறுவிதமான இருக்கே...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement