ரூ.50 ஆயிரத்திற்கு மேலான பரிவர்த்தனைக்கு மின்னணு ரசீது கட்டாயம்: மத்திய அரசு தகவல்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரூ.50 ஆயிரத்திற்கு மேலான பரிவர்த்தனைக்கு மின்னணு ரசீது கட்டாயம்: மத்திய அரசு தகவல்

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (8)
Advertisement
ரூ.50000,பரிவர்த்தனை,மின்னணு ரசீது,கட்டாயம்,உயர்நீதிமன்றம்,மத்திய அரசு

மதுரை : 'ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்த வியாபாரிகள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்யும்போது மின்னணு முறையிலான ரசீது வழங்குவது கட்டாயம்,' என மத்திய அரசுத் தரப்பில் தாக்கல் செய்த பதிலை பதிவு செய்த உயர்நீதிமன்றமதுரைக் கிளை, அது தொடர்பான வழக்கை முடித்து வைத்தது.

மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: இந்தியா முழுவதும் 2017 ஜூலை 1 முதல் ஜி.எஸ்.டி., வரி விதிப்பு அமலானது. இதை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. எந்தெந்த பொருளுக்கு எவ்வளவு வரி என்பது மக்களுக்கு சரியாக தெரியவில்லை. இதனால் பொருட்களை விற்பனை செய்வோர் மக்களையும், அரசையும் ஏமாற்றலாம்.

பொருட்களை வாங்குவோரிடம் வசூலித்த வரியை, சில வியாபாரிகள் அரசுக்கு செலுத்துவதில்லை. இதன் மூலம் ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்தியதன் நோக்கம் நிறைவேறாமல் போக வாய்ப்புள்ளது. மக்களிடம் வசூலிக்கும் வரி முறையாக மத்திய, மாநில அரசுகளுக்கு செலுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். 5000 ரூபாய்க்கு அதிகமான மதிப்பில் எந்தபொருள் வாங்கினாலும், ஆன்லைன் ரசீது வழங்க வேண்டும். இதன் மூலம் பல்வேறு குளறுபடிகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசுக்கும் வரி சரியான முறையில் சென்றடையும்.

5000 ரூபாய்க்கு அதிகமான பொருட்களுக்கு ஆன்லைன் ரசீது வழங்க வேண்டும். எஸ்.எம்.எஸ்., மூலம் ஆன்லைன் ரசீது பெற மற்றும் ரத்து செய்யும் வசதி செய்ய வேண்டும். அதற்கென தனித்த அடையாள குறியீட்டு எண் வழங்க வேண்டும். மாநிலம், மாவட்டம், மண்டல அளவில் பறக்கும் படைகள் அமைத்து கண்காணிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ரமேஷ் மனு செய்திருந்தார்.

நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வு விசாரித்தது. மத்திய அரசு பதில் மனு: ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்த வியாபாரிகள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்யும்போது மின்னணு முறையிலான ரசீது (இவே பில்) வழங்குவது கட்டாயம். பதிவு செய்த வியாபாரிகள் 50 ஆயிரத்திற்கு குறைவான பரிவர்த்தனைக்கு, அவர்கள் விரும்பும் பட்சத்தில் மின்னணு ரசீது வழங்கலாம்.

எஸ்.எம்.எஸ்., மற்றும் தனித்த அடையாள குறியீட்டு எண் வசதி செய்யப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., கமிஷனர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட அலுவலர்கள் கொண்ட குழு, பொருட்கள் மற்றும் ஆவணங்களை எப்போதும் பரிசோதிக்கும் வகையில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், 'இதில் மேலும் உத்தரவு எதுவும் பிறப்பிக்கத் தேவையில்லை. வழக்கை முடித்து வைக்கிறோம்,' என்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manian - chennai,இந்தியா
04-ஜன-201819:40:15 IST Report Abuse
manian சரியான அரசாங்கம் மக்களளுக்கான அரசாக இருந்து விலைவாசியை கட்டுக்குள் வைத்து ஒரு நிலைத்தமையை உருவாக்கவேண்டும்.வரி சீர்திருத்தத்தில் மட்டுமே கவனம் போதாது
Rate this:
Share this comment
Cancel
ராமன் அப்துல்லா - Vizhuppuram,TN,இந்தியா
04-ஜன-201809:17:55 IST Report Abuse
ராமன் அப்துல்லா ஜி எஸ் டி மற்றும் பணமதிப்பிழப்பை பற்றி மக்கள் மறக்க இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆகும்..எனவே இப்போது பிஜேபி என்ன செய்தாலும் மக்கள் தவறான கண்ணோட்டத்தோடு தான் பார்ப்பார்கள்.இதற்கு காரணம் மோடி என்று சொல்லுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
manian - chennai,இந்தியா
04-ஜன-201808:54:33 IST Report Abuse
manian ஐம்பதாயிரம் வரை ரசீது அவசியமில்லையா?
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
04-ஜன-201808:52:55 IST Report Abuse
balakrishnan உங்களோட குழப்பத்துக்கு ஒரு அளவே இல்லையா, இதுக்கெல்லாம் நீங்கள் மிகப்பெரிய விலையை கொடுக்கவேண்டி இருக்கும்,
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
04-ஜன-201812:28:51 IST Report Abuse
Cheran Perumalதினகரன் பிரதமராகும்போது இந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வரும். ஏனெனில் வருமானம் முழுதும் ஒரு கொள்ளை கூட்டத்துக்குத்தான் செல்லும்....
Rate this:
Share this comment
Cancel
04-ஜன-201807:34:22 IST Report Abuse
அப்பு மொதல்ல இவனுகளுக்கே எந்தப் பொருளுக்கு என்ன வரின்னு தெரியாது. இன்னிக்கு போடறாங்க... நாளைக்கு குறைக்கறாங்க.. பேசாம 5 ரூவாய்க்கு மேல் வாங்குனா ரசீது கட்டாயம்னு சொல்லுங்க..கட்டணக்கழிப்பறையில் கொள்ளை அடிக்குறானுக..
Rate this:
Share this comment
Cancel
Krishna - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஜன-201801:28:11 IST Report Abuse
Krishna எலக்ட்ரிகல் வியாபாரி ஒருவர் ஜி எஸ் டி பணத்தையும் வாங்கிக்கொண்டு வெள்ளை பேப்பரில் ரெசிப்ட் கொடுக்கிறார் . அவர் அரசாங்கத்தையும் மக்களையும் ஏமாற்ற பார்க்கிறார். மக்கள் வரி பிடிக்கவில்லை என்று நினைத்து சந்தோசமாக செல்லுகிறார்கள். இந்த நாடு என்று உருப்படும்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
04-ஜன-201801:09:21 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அரசியல் கட்சிகளுக்கு இதில் விதிவிலக்கு அளித்திருப்பார்களே. என்ன சரியா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை