ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.204 கோடி ௧௧ம் தேதிக்குள் வழங்க உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.204 கோடி ௧௧ம் தேதிக்குள் வழங்க உத்தரவு

Added : ஜன 03, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை,ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான நிலுவைத் தொகையில் 204 கோடி ரூபாயை வரும் ௧௧ம் தேதிக்குள் வழங்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான நிலுவைத் தொகை வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை எதிர்த்துதொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிட்டது.போராட்டம் நீடித்தால் அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தது.அப்போது மதுரையைச் சேர்ந்த மாயாண்டி சேர்வை என்பவர்,நீதிபதிகளுக்கு கடிதம் அனுப்பினார்.அதில் ஓய்வுபெற்ற ஊழியர்களின் நிலையை விவரித்து 'எங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட உங்களுக்கு எப்படி மனசு வந்தது?' என, கேள்வி எழுப்பி இருந்தார். இந்த கடிதம் வழக்காக விசாரணைக்கு எடுக்கப்பட்டது.நீதிபதிகள், மணிக்குமார், ஆர்.சுரேஷ்குமார் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' வழக்கை விசாரித்தது. ௨௦௧௭ டிச., ௧௫க்குள் ௩௭௯ கோடி ரூபாயை இரு தவணைகளில் வழங்கும்படி உத்தரவிட்டது.இதையடுத்து இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது ஓய்வுபெற்ற ஊழியர்களின் நலன் கருதி, ௧௭௫ கோடி ரூபாயைமுதல் தவணையில் ஒதுக்குவதாகவும்...இரண்டாவது தவணையில் மீதி, 204கோடி ரூபாயை ஒதுக்குவது குறித்து, அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதாகவும், அட்வகேட் ஜெனரல் கூறினார்.இந்நிலையில் நீதிபதிகள், மணிக்குமார், கோவிந்தராஜ் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் அரசு கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், 175 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.பின், டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, சட்டப்படி வழங்க வேண்டிய தொகை கால தாமதமாக வழங்கப்படுகிறது. அதுவும் நிர்ணயித்த தேதியையும் தாண்டி வழங்கப்படுகிறது.பாக்கி தொகையில் ௨௦௪ கோடி ரூபாயை வரும் ௧௧ம் தேதிக்குள் அரசு வழங்க வேண்டும். அந்த தொகையை, 12ம் தேதி பயனாளிகளுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறுடிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X