கருணாநிதியிடம் ஆசி பெற்றேன்: ரஜினி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கருணாநிதியிடம் ஆசி பெற்றேன்: ரஜினி

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கருணாநிதியிடம்  ஆசி பெற்றேன்: ரஜினி

நடிகர் ரஜினி, தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ள நிலையில், தி.மு.க., தலைவர், கருணாநிதியை, அவரது வீட்டில், நேற்று சந்தித்து ஆசி பெற்றார்.ரஜினி, தனிக்கட்சி துவக்கும் அறிவிப்பை, டிச., 31ல் வெளியிட்டார். ஆன்மிக அரசியல் தான் என் பாதை என்றும் அறிவித்தார். நேற்று முன்தினம், ரஜினி சென்னை, ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி கவுதமானந்தாவை சந்தித்து பேசினார்.நேற்று இரவு, தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்திக்க, அவரது கோபாலபுரம் வீட்டிற்கு சென்றார். ரஜினியை, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் வரவேற்றார்.கருணாநிதியிடம் ரஜினி உடல்நலம் விசாரித்தார்; ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து, ஆசி பெற்றார்.பின், ரஜினி கூறுகையில், ''என் அரசியல் பிரவேசம் குறித்து, கருணாநிதியிடம் தெரிவித்து, ஆசி பெற்றேன். கருணாநிதிக்கு, புத்தாண்டு வாழ்த்து கூறி, அவரது உடல் நலம் குறித்தும் விசாரித்தேன்,'' என்றார்.முன்னதாக நேற்று காலை கருணாநிதியை அவரது மகன் அழகிரி சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கருணாநிதி நலமுடன் உள்ளதாகவும், ரஜினியை சந்திக்க, தான் நேரம் கேட்டுஉள்ளதாகவும் கூறினார். - நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kandhan. - chennai,இந்தியா
13-ஜன-201817:34:43 IST Report Abuse
kandhan. அரசியல் நாகரீகம் தெரிந்தவர் அதனால் பெரியவரிடம் ஆசி பெறுகிறார் இதில் என்ன தவறு ?/இதிலும் அரசியல் செய்வதை நிறுத்துங்கள் ' கந்தன் சென்னை
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
04-ஜன-201810:40:04 IST Report Abuse
ganapati sb ராகுல் மோடி யெச்சூரி போன்றோர் கருணாவை சந்தித்தது போல தான் இதுவும். எப்போதுமே ரஜினி மோடி சிதம்பரம் ஜெய மட்டுமல்லாது கருணாநிதி அத்வானி மூப்பனார் தாக்கரே போன்ற மூத்த தலைவர்களை சந்தித்து நட்பு பாராட்டுபவர் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை