ரேஷன் கடைகள் திடீர், 'பிசி' ஊழியர் விடுப்பு எடுக்க தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடைகள் திடீர், 'பிசி' ஊழியர் விடுப்பு எடுக்க தடை

Added : ஜன 03, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும்; சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகளில், தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை; முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு துண்டு அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, ரேஷன் ஊழியர்கள் விடுப்பு எடுக்க, உணவு துறை தடை விதித்துள்ளது.இது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷன் கடைகளில், ஒழுங்காக பொருட்கள் வாங்காதோரும், பொங்கலை முன்னிட்டு வாங்கு வர். தற்போது, பொங்கல் பரிசும் வழங்கப்பட இருக்கிறது. இதனால், இரு வாரங்களுக்கு, ஊழியர்கள் விடுப்பு எடுக்காமல், பணிக்கு வருவதை உறுதி செய்யுமாறும்; மருத்துவ சிகிச்சை, குடும்ப விழா போன்ற நியாயமான காரணங்களுக்கு, விடுப்பு எடுக்க அனுமதிக்கும்படியும், ரேஷன் கடைகளை நடத்தும், கூட்டுறவு சங்கங்களிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை