மின் கம்பத்தில் திட்டத்தின் பெயர்: மத்திய அரசு கடிதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின் கம்பத்தில் திட்டத்தின் பெயர்: மத்திய அரசு கடிதம்

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மின் கம்பம், 'டிரான்ஸ்பார்மர்' உள்ளிட்ட சாதனங்களில், திட்ட பணிகளின் பெயரை குறிப்பிடும்படி, தமிழக அரசுக்கு, மத்திய மின் துறை கடிதம் எழுதிஉள்ளது.மின் சப்ளைமத்திய அரசு, தீன்தயாள் மின் திட்டத்தில் கிராமங்களுக்கும், ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டத்தில் நகரங்களுக்கும், சீராக மின், 'சப்ளை' செய்வதற்கான பணிகளை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில், தீன்தயாள் திட்டத்திற்கு, 924 கோடி ரூபாயையும்; ஒருங்கிணைந்த திட்டத்திற்கு, 1,561 கோடி ரூபாயையும், மத்திய மின் துறை ஒதுக்கிஉள்ளது.திட்ட பணிகள் தொடர்பாக, மக்கள் தெரிந்து கொள்வதற்காக, பணிகள் நடக்கும் இடங்களில், அதன் மதிப்பு உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய பலகை வைக்கும்படி, மாநில மின் வாரியங்களை, மத்திய மின் துறை அறிவுறுத்தியது. அதை, தமிழக மின் வாரியம் முழுமையாக செயல்படுத்தவில்லை.இது குறித்து, மத்திய மின் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வெளிப்படையான நிர்வாகத்திற்காக, தீன்தயாள் மற்றும் ஒருங்கிணைந்த மின் திட்ட பணிகள் நடக்கும் இடங்களில், அந்த திட்டம் தொடர்பாக விளம்பர பலகை வைக்கும்படி, பல முறை கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளை, மாநில மின் வாரியங்கள் எடுக்காததுடன், அந்த விபரத்தையும் தெரிவிக்கவில்லை.இதனால், பணிகள் நடக்கும் இடங்களில், விளம்பர பலகைகளை வைப்பதுடன், ஒருங்கிணைந்த மற்றும் தீன்தயாள் திட்ட பணிகளின் கீழ் செய்யப்படும், மின் கம்பம், துணை மின் நிலையம், டிரான்ஸ்பார்மர், மீட்டர் போன்றவற்றில், திட்டத்தின் பெயரை குறிப்பிட வேண்டும்.எரிசக்தி துறைஇது பற்றிய தகவலை, மத்திய மின் துறையின், 'பவர் பைனான்ஸ், ரூரல் எலக்ட்ரிபிகேஷன்' ஆகிய நிறுவனங்களுக்கு, மாதந்தோறும் தெரிவிக்குமாறு, ஜன., 1ல், தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில எரிசக்தி துறை செயலர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை