ஷீரடிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஷீரடிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், மஹாராஷ்டிரா மாநிலம், ஷீரடிக்கு சிறப்பு சுற்றுலா ரயிலை இயக்குகிறது.* இந்த ரயில், மதுரையில் இருந்து ஷீரடிக்கு, வரும், 23ல், புறப்படுகிறது * ஏழு நாள் சுற்றுலாவில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி, பந்திப்பூர் மற்றும் ஆந்திரா மாநிலம், மத்ராலயத்திற்கு சென்று வரலாம். ஒருவருக்கு, 6,615 ரூபாய் கட்டணம். *மதுரையில் இருந்து, வரும், 12ம் தேதி, அமாவாசை சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இதில், ஒடிசா மாநிலத்தில், பூரி ஜெகநாதர், கோனார்க் சூரிய நாராயணா கோவில்கள், புவனேஸ்வர் லிங்கராஜா கோவில், பீஹார் மாநிலம், கயாவிற்கு செல்லலாம் *காசியில் கங்கா ஸ்நானம் செய்யலாம். காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணியை தரிசிக்கலாம். அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நீராடலாம். ஒன்பது நாள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு, 8,505 ரூபாய் கட்டணம்*இந்த இரண்டு ரயில்களும், திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்ப்பேட்டை, காட்பாடி மற்றும் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லும் *மேலும், தகவலுக்கு, சென்னை, ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40681 என்ற, மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை