மாற்று திறனாளிகளுக்கு டி.டி.சி.பி.,யில் பணியிடம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாற்று திறனாளிகளுக்கு டி.டி.சி.பி.,யில் பணியிடம்

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நகர் ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி.,யில், எட்டு பணியிடங்கள், மாற்று திறனாளிகளுக்காக, ஒதுக்கப்பட்டுள்ளன.வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., - நகர் ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., வீட்டுவசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரியம் உள்ளிட்ட துறைகள் செயல்படுகின்றன. இத்துறைகளில், 'குரூப் - ஏ, பி' ஆகிய நிலைகளில், மாற்று திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டுக்கு ஏற்ற பணியிடங்கள் குறித்த பட்டியலை அரசு கோரியது. இது குறித்து, சம்பந்தப்பட்ட துறைகள் ஆய்வுகளை முடித்து, விபரங்களை அரசுக்கு அனுப்பி உள்ளன.இது தொடர்பாக, டி.டி.சி.பி., அதிகாரிகள் கூறியதாவது:டி.டி.சி.பி.,யில், புள்ளியியல், பொருளாதாரம், சமூகவியல், புவியியல் பிரிவுகளுக்கான ஆய்வு உதவியாளர், கட்டடகலை உதவியாளர், மைக்ரோ பிலிம் வல்லுனர், மூன்றாம் நிலை வரைவாளர், உதவி இயக்குனர் என, மொத்தம் எட்டு பணியிடங்கள் குறித்த பட்டியல், அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவற்றில், மாற்று திறனாளிகளை பணியமர்த்தலாம் என, அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.டி.டி.சி.பி., அனுப்பிய பட்டியல் போன்று, சி.எம்.டி.ஏ., அதிகாரிகளும் அனுப்பி இருக்க வேண்டும். ஆனால், இங்கு பணி விதிகள் குழப்பம், தற்காலிக பணியிடங்களை வரையறை செய்வதில் சிக்கல் போன்ற காரணங்களால், பட்டியல் தயாரிப்பு பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X