சபரிமலை பெயர் மீண்டும் மாற்றம் ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் ஆகிறது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சபரிமலை பெயர் மீண்டும் மாற்றம் ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் ஆகிறது

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சபரிமலை, சபரிமலை கோயில் பெயர் மீண்டும் ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் என மாறுகிறது. இதற்கான தீர்மானம் அடுத்த தேவசம்போர்டு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என்று தலைவர் பத்மகுமார் கூறினார்.சபரிமலையில் வயது பெண்களை அனுமதிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. தர்மசாஸ்தா கோயில் என்றால் பெண்கள் வரலாம். ஐயப்பன் பிரம்மச்சாரி என்பதால் ்ஐயப்பன் கோயிலுக்குபெண்கள் வரமுடியாது. இந்த அடிப்படையில் சபரிமலை தர்ம சாஸ்தா கோயில் என்பதை கடந்த தேவசம்போர்டு நிர்வாகிகள் சபரிமலை ஐயப்பன் கோயில் என்று மாற்றினர். ஆனால், தற்போதைய இடது முன்னணி அரசின் தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், அரசுக்கு தெரியாமல் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.இந்நிலையில் காங்கிரஸ் உறுப்பினர்களை கொண்ட தேவசம்போர்டின் பதவி காலத்தை குறைத்து , புதிய இடது முன்னணி போர்டு தற்போது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் சபரிமலை கோயில் பெயரை ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் என மாற்ற போவதாக தலைவர் பத்மகுமார் கூறினார். இதற்கான தீர்மானம் அடுத்த தேவசம்போர்டு கூட்டத்தில் நிறைவேற்றப்படும். 83கி.மீ துாரம் உள்ள திருவாபரண பாதையில் 10 கி.மீ. இடைவெளியில் ஓய்வு எடுப்பதற்கான மையங்கள் ஏற்படுத்தப்படும். சபரிமலை வரும் தனியார் வாகனங்களை நிலக்கல் வரை மட்டும் அனுமதிப்பது பற்றி தேவசம்போர்டு விரைவில் முடிவு எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை