மின்னணு நெல் கொள்முதல் அதிகாரிகளுக்கு அரசு பயிற்சி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மின்னணு நெல் கொள்முதல் அதிகாரிகளுக்கு அரசு பயிற்சி

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மின்னணு நெல் கொள்முதல் தொடர்பாக, நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு, மத்திய அரசு பயிற்சி வழங்க உள்ளது.மின்னணு நெல் கொள்முதல் திட்டத்தை துவக்க, வாணிப கழகம் முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக, நெல் கொள்முதல் நிலையங்களில், 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி பயன்படுத்தப்படும். அதில், விவசாயி, அவரின் வங்கி கணக்கு எண், நெல் கொள்முதல் உள்ளிட்ட விபரங்கள் மற்றும் விரல் ரேகை பதிவு செய்யப்படும். பின், நெல்லை வழங்கியதும், விவசாயி வங்கி கணக்கில், சில மணி நேரங்களில், பணம் வரவு வைக்கப்படும்.இதுகுறித்து, வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:இரு ஆண்டுகளுக்கு முன், மின்னணு நெல் கொள்முதல் திட்டத்தை துவக்க முடிவு செய்யப்பட்டது. அரசியல் குறுக்கீடு அதிகம் இருந்ததால், அதை செயல்படுத்த முடியவில்லை. தற்போது, மத்திய அரசின் வலியுறுத்தலால், அத்திட்டம், செயல்படுத்தப்பட இருக்கிறது. எனவே, மின்னணு நெல் கொள்முதல் தொடர்பாக, அந்த பணியில் ஈடுபடுட்டு வரும் அதிகாரிகளுக்கு, மத்திய உணவு துறை, விரைவில் பயிற்சி வழங்க உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை