நித்தியின் வெளிநாட்டு சீடர்கள் தடையை மீறி சாமி தரிசனம் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நித்தியின் வெளிநாட்டு சீடர்கள் தடையை மீறி சாமி தரிசனம்

Added : ஜன 04, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நித்தியின் வெளிநாட்டு சீடர்கள்  தடையை மீறி சாமி தரிசனம்

திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நித்யானந்தாவின் வெளிநாட்டு சீடர்கள், தடை உத்தரவை மீறி, சாமி தரிசனம் செய்தனர்.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, இந்தியா மட்டுமன்றி, பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்வதோடு, கிரிவலம் சென்று, ரமணர் ஆசிரமம், யோகிராம்சுரத்குமார் ஆசிரமம் மற்றும் சேஷாத்திரி ஆசிரமம் ஆகிய இடங்களுக்கு சென்று வழிபடுவர். வழக்கமாக, ஆண்டு தோறும் அக்., முதல், ஏப்., வரை, கூடுதலான பக்தர்கள் வருவர்.இந்நிலையில், வெளிநாட்டவர்கள் கோவிலில், முதல் மற்றும் இரண்டாம் பிரகாரத்திற்குள் செல்லவும், சாமி தரிசனம் செய்யவும் தடை விதித்து, கடந்தாண்டு கோவில் நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால், நித்யானந்தாவின், வெளிநாட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படாமல் இருந்தனர். மேலும், கோவிலுக்குள் கேமரா எடுத்து செல்லவும், படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று காலை, பெங்களூரு பிடதி ஆசிரமத்திலிருந்து வந்த, 185 நித்யானந்தாவின் வெளிநாட்டு சீடர்கள், அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்து, சாமி தரிசனம் செய்தனர். இதில் பலர், கோவில் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்ததோடு, கேமராக்களில் படம் எடுத்தும், செல்பிஎடுத்தும் மகிழ்ந்தனர்.இவர்களை, கோவில் ஊழியர்களோ, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரோ கண்டுகொள்ளவில்லை. இதேபோல், மற்ற வெளிநாட்டு பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என, வெளிநாட்டு பக்தர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
04-ஜன-201812:58:46 IST Report Abuse
Nemam Natarajan Pasupathy Yes All must be permitted like in Tirumala where apart from public following other religions ,the heads of state of foreign countries, Chief Ministers of Indian States following some other religion are alllowed even special dharshan. God is supreme and He is not bothered at all as to who is worshiping Him
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-ஜன-201803:01:20 IST Report Abuse
தமிழ்வேல் வேறுபாடு பாராமல் அனுமதிக்க வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை