அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர்: 12 பேர் பட்டியல் வெளியீடு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர்: 12 பேர் பட்டியல் வெளியீடு

Added : ஜன 04, 2018 | கருத்துகள் (4)
Advertisement
அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர்: 12 பேர் பட்டியல் வெளியீடு

சென்னை, அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர்கள் பட்டியல், நேற்று வெளியானது.ஜெ., இருந்த போது, 2016 ஜூன் மாதம், 14 பேர் இடம் பெற்ற, செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். அந்த பட்டியலில், அமைச்சர் பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர்கள், பொன்னையன், ராமச்சந்திரன், வைத்திலிங்கம், வளர்மதி, வைகைச்செல்வன், சம்பத், முன்னாள் மத்திய அமைச்சர், பாலசுப்ரமணியன், சி.ஆர்.சரஸ்வதி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், சமரசம், தீரன், செல்வராஜ், கவுரிசங்கர், நிர்மலா பெரியசாமி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.அதன்பின், முன்னாள் அமைச்சர், விஸ்வநாதன் உட்பட சிலர் நியமிக்கப்பட்டனர். அவரது மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டது. அணிகள் இணைந்ததும், புதிய செய்தி தொடர்பாளர் பட்டியல் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டது. இப்பட்டியலில் இடம்பெற, பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே, கடும் போட்டி நிலவியது. ஏற்கனவே, ஜெ., அறிவித்த பட்டியலில் இருந்த, சம்பத், சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர், தற்போது, தினகரன் அணியில் உள்ளனர்.இந்நிலையில், நேற்று, 12 பேர் பட்டியல் வெளியிடப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள், பொன்னையன், வளர்மதி, கோகுலஇந்திரா, வைகைச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், ஜே.சி.டி.பிரபாகர், சமரசம், செல்வராஜ், தீரன், பாபுமுருகவேல், மகேஸ்வரி, முன்னாள் எம்.பி., பழனிசாமி, மருது அழகுராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.இவர்கள் தவிர, வேறு யாருக்கும், 'டிவி' விவாதங்களில் பங்கேற்க அனுமதி இல்லை. கூட்டணி கட்சிகளில், இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சி தலைவர், ஜவகர் அலி, ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களில் பங்கேற்பார் என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், பழனிசாமி அறிவித்து உள்ளனர்.செய்தித் தொடர்பாளர் பட்டியலில், கோகுலஇந்திரா, பாபுமுருகவேல், மகேஸ்வரி, மருது அழகுராஜ், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர், புதிதாக இடம் பெற்றுள்ளனர். இவர்களில் பாபுமுருகவேல், தே.மு.தி.க.,விலிருந்தும், மகேஸ்வரி, காங்கிரஸ் கட்சியிலிருந்தும், அ.தி.மு.க.,விற்கு வந்தவர்கள்.இப்பட்டியலில், முதல்வர் பழனிசாமி ஆதரவாளர்கள், ஆறு பேர், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், ஐந்து பேருடன், 'நமது எம்.ஜி.ஆர்.,' நாளிதழ் முன்னாள் ஆசிரியர், மருதுஅழகுராஜும் இடம் பெற்றுள்ளார். ஏற்கனவே இப்பொறுப்பில் இருந்த, அமைச்சர் பாண்டியராஜன், 'டிவி' விவாதங்களில் அதிகம் பங்கெடுத்து வரும், ஆவடி குமார், டாக்டர் அழகு தமிழ்செல்வி, அஸ்பயர் சுவாமிநாதன் ஆகியோர் பெயர்கள் இடம்பெறாதது, கட்சியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prem - chennai,இந்தியா
04-ஜன-201818:44:19 IST Report Abuse
Prem Katchiyoda athigarapoorva arivippugal ellam evargal moolamae vandhu adaiyum
Rate this:
Share this comment
Cancel
ram - chennai,இந்தியா
04-ஜன-201816:44:26 IST Report Abuse
ram அதிமுகவின் கொள்கைகள் இவர்கள் மூலமாக மக்களுக்கு செல்லும்... வேறு யாரும் பரப்பும் போலியான தகவல்களை நம்ப வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel
JANANI - chennai,இந்தியா
04-ஜன-201816:36:46 IST Report Abuse
JANANI thamilaga arasin intha mudivu sirappanathu.. veen vathanthikalum vimarsanamum paravamal irukkum...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X