ஜல்லிக்கட்டு போட்டி கலெக்டர்களுக்கு கடிதம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு போட்டி கலெக்டர்களுக்கு கடிதம்

Added : ஜன 04, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஜல்லிக்கட்டு போட்டியை கையாள வேண்டிய விதம் குறித்து, 15 மாவட்ட கலெக்டர்களுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு, உச்ச நீதிமன்றம் விதித்திருந்த தடையை நீக்கும் வகையில், தமிழக அரசு சார்பில், ஜல்லிக்கட்டு திருத்த சட்டம், 2017ல் அமலானது; அதனால், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன.அப்போது எடுக்கப்பட்டதாகக் கூறி, புகைப்படங்களை, உச்ச நீதிமன்றத்தில், பிராணிகள் நல அமைப்பு தாக்கல் செய்து இந்த ஆண்டு, ஜல்லிக்கட்டுக்கு தடை கோரியது. ஆனால், நீதிமன்றம் மறுத்து விட்டது.எனினும், மீண்டும் இப்பிரச்னையை எழுப்ப, அந்த அமைப்புகள் தயாராகி வருகின்றன. அதை சமாளிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, கலெக்டர்களுக்கு, கால்நடை துறை செயலர், கோபால் கடிதம் எழுதியுள்ளார்.இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: ஜல்லிக்கட்டு மட்டுமின்றி, மஞ்சுவிரட்டு, வடமாடு, எருது விடு விழா போன்றவற்றுக்கான தடையும் நீக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் நடத்த அனுமதி தரப்பட்டுள்ள, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 15 மாவட்டங்களின் கலெக்டர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.'மாவட்ட கலெக்டர்கள், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தருவதற்கு முன், போட்டி நடக்கும் இடத்தை ஆய்வு செய்ய வேண்டும். பின், ஜல்லிக்கட்டு விதிகளின் அடிப்படையில் நடத்தப்படுகிறதா என, கண்காணிக்க வேண்டும்.சுகாதாரம், கால்நடை, காவல் மற்றும் வருவாய் ஆகிய துறைகள் அடங்கிய குழுவை உருவாக்க வேண்டும். போட்டி நடந்த பின், விரிவான அறிக்கையை அரசுக்கு அனுப்ப வேண்டும்' என அதில் கூறப்பட்டுள்ளது, என்றார். - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasiniventhan Muthuramalingam - Bangalore,இந்தியா
04-ஜன-201813:27:52 IST Report Abuse
Kasiniventhan Muthuramalingam கலெக்டர்கள் ,தாசில்தார்கள் அவர்களும் இறங்கி மாடுபிடிப்பதற்கு ஏதாவது அரசு விதிகள் இருந்தா கொஞ்சம் தெளிவு பட்டுதுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை