'தமிழகத்தில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை'| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தமிழகத்தில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை'

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை, ''தமிழகத்தில், விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார்.தமிழக சுகாதார திட்டங்கள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், 15 'டிவி'க்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் நேற்று துவக்கி வைத்தார்.மேலும், அரசு மருத்துவமனைகளின் சாதனைகள் மற்றும் பொதுமக்களின் சந்தேகங்களை தெளிவுப்படுத்த, www.Facebook.com/DoHFWTN, www.twitter.com/DoHFWTN, www.youtube.com/UChbL58KSCm5O_LGD5g என்ற, சமூக வலைதள பக்கங்களின் செயல்பாடுகளும் துவக்கி வைக்கப்பட்டன.நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிதாவது:சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், தினமும், 15 ஆயிரம் புறநோயாளிகள்; 3,000 உள்நோயாளிகள் பயன்பெறுகின்றனர். பொதுமக்கள் மருத்துவமனை வசதிகள் மற்றும் அரசின் சுகாதார திட்டங்களை தெரிந்து கொள்ளவும், பொதுமக்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு விளக்கம் தரும் வகையிலும், இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது.இந்த நடைமுறை, அனைத்து மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.தேசிய மருத்துவ கமிஷன் தொடர்பான மசோதாவை, பார்லிமென்ட் நிலைக்குழு பரிசீலனைக்கு, மத்திய அரசு அனுப்பியதை வரவேற்கிறோம். அப்போது தான், மாநில அரசுகளின் நிலை, டாக்டர்களின் நிலை குறித்த கருத்து தெரிவிக்க முடியும்.இந்த கமிஷனில், மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையில், அதிக பிரதிநிதித்துவம் தர வேண்டும். தமிழகத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து, மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்; விரைவில் மருத்துவமனை அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X