பட்டாசு ஆலைகளுக்கு ஆதரவாக சிவகாசியில் கடையடைப்பு அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பட்டாசு ஆலைகளுக்கு ஆதரவாக சிவகாசியில் கடையடைப்பு அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Updated : ஜன 04, 2018 | Added : ஜன 04, 2018
Advertisement
பட்டாசு ஆலைகளுக்கு ஆதரவாக சிவகாசியில் கடையடைப்பு அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சிவகாசி, சுற்றுச்சூழல் மாசு சட்டத்தில் பட்டாசிற்கு சிறப்பு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதுட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் நடத்தி வரும் ஆலைமூடல் போராட்டத்திற்கு ஆதரவாக, சிவகாசியில் கடையடைப்பு போராட்டம் ஆர்ப்பாட்டம் நடந்தது.உச்சநீதிமன்றத்தில் பட்டாசு தடை கோரி போடப்பட்டுள்ள வழக்கு நாளை (ஜன., 5) விசாரணைக்கு வர உள்ளது. உச்சநீதிமன்றம் பட்டாசு விற்பனை மற்றும் உற்பத்திக்குதடை விதிக்க நேரிட்டால், இத்தொழிலை சார்ந்திருக்கும் பல லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பறிபோகும்நிலை உள்ளது. கடந்த தீபாவளி நேரத்தில் டில்லி உட்பட 5 மாநிலங்களில் பட்டாசால் மாசு ஏற்படுவதாக கூறி இதன் விற்பனைக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் வியாபாரிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர். இதனால் வெளி மாநில பட்டாசு வியாபாரிகள் தீபாவளிக்கு பின் பட்டாசு உற்பத்திக்கான ஆர்டரை கொடுக்கமுன்வரவில்லை.சுற்றுச்சூழல் மாசு சட்டத்தில் பட்டாசிற்கு சிறப்பு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். பட்டாசுக்கு தடை கோரி போடப்பட்டுள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி டிச., 26 முதல் பட்டாசு உரிமையாளர்கள் ஆலைகளை மூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் 8லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடையடைப்புஇந்நிலையில் உரிமையாளர்கள் நடத்தி வரும் ஆலை மூடல் போராட்டத்திற்கு ஆதரவாக ,சிவகாசி, திருத்தங்கல், வெம்பக்கோட்டை மற்றும் சுற்றுப்பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. ஆட்டோக்கள் ஓடவில்லை. பல கட்சிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் சிவகாசி பஸ் ஸ்டாண்ட் முன் நடந்தது. தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தலைமை வகித்தனர். காங்கிரஸ், தினகரன் அணி, கம்யூ.,க்கள்,ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, பா.ம.க., உள்ளிட்ட 9 கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.இதையடுத்து சிவகாசி காமராஜர் சிலை முன்பிருந்து சி.ஐ.டி.யு., சார்பில் பட்டாசு தொழிலாளர்கள் ஊர்வலமாக சாட்சியாபுரம் கோட்டாட்சியர் அலுவலம் சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ்நாடு வணிகர் பேரவை தலைவர் விக்கிரமராஜா, சி.ஐ.டி.யூ., துணைத்தலைவர் பத்மநாபன் உட்பட பலர் பங்கேற்றனர். இதில் தொழிலாளர்கள், பட்டாசு ஆலைஉரிமையாளர்கள், வியாபாரிகள், ஏஜன்டுகள், டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் எனஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.*கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தீப்பெட்டிஆலைகளுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. பிரின்டிங் நிறுவனங்களும், அச்சு ஆலைகளும் மூடப்பட்டிருந்தன.
தீர்வு இல்லாவிடில் தமிழகம் முழுவதும் பந்த்பட்டாசு ஆலைகளை நம்பி தொழிலாளர்கள் மட்டும் இல்லை வியாபாரிகளும் உள்ளனர். தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான சிறு, பெருவியாபாரிகள் இத்தொழிலை சார்ந்தே உள்ளனர். இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் வழக்குகளின்அடிப்படையில் உச்சநீதிமன்றம் பட்டாசு தொழிலை கழுத்தை இறுக்கி பிடிக்கிறது. மூச்சு விடமுடியாத நிலைக்கு கொண்டு சென்றால் தொழிலை சார்ந்தவர்கள் அனைவரும் இறக்கதான் செய்ய வேண்டும். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக பிரதமரை சந்தித்து பட்டாசு தடை கோரி வழக்குகளில் தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். இல்லையென்றால் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடக்கும் .விக்கிரமராஜா, தலைவர், வணிகர் பேரவை.பட்டாசை முடக்க நினைப்பது சரியல்லகாற்று மாசு என்ற ஒரு காரணத்தை காட்டி பட்டாசு தொழிலை முடக்க நினைப்பது சரியல்ல. காற்று மாசுவினை குறைக்க பல்வேறு முறைகள் உள்ளன. இதை செயல்படுத்த அரசும், நீதிமன்றமும் முயல வேண்டும். காற்று மாசுவிற்கு வழிவகை செய்யும் உற்பத்தி ஆலைகள், வாகனங்களில் புகையினை குறைத்திட ஏற்ற திட்டத்தை உருவாக்க வேண்டும். இதைவிடுத்து 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கையில் விளையாடக்கூடாது. நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையில் 1 லட்சம் பட்டாசு தொழிலாளர்களின் கையொப்பம் பெற்று பிரதிவாதியாக சேர்க்க மனு கொடுக்கப்படும்.பத்மநாபன், அகில இந்திய துணைத்தலைவர், சி.ஐ.டி.யூ.,Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை