பட்டுக்கூடு விவசாயிக்கு ரூ. ஒரு லட்சம் பரிசு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பட்டுக்கூடு விவசாயிக்கு ரூ. ஒரு லட்சம் பரிசு

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திண்டுக்கல் அதிகளவில் பட்டுக் கூடு உற்பத்தி செய்யும் விவசாயிக்கு மாநில அளவில் ரூ.ஒரு லட்சம், மாவட்ட அளவில் ரூ.25 ஆயிரம் பரிசு வழங்க உள்ளதாக, பட்டு வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.வெண்பட்டுக் கூடு உற்பத்தியில் தமிழகம் முதல் மாநிலமாக விளங்குகிறது. தமிழக பட்டுக் கூடுகளுக்கு வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் மவுசு அதிகம் உள்ளது.இதனால், பட்டு விவசாயிகளை ஊக்குவிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக பட்டுக் கூடு உற்பத்தி விவசாயிகளுக்கு போட்டி வைக்கின்றனர். மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்க முடிவு செய்துள்ளனர்.விவசாயிகள் முட்டை தொகுதிகள் பெற்றதற்கான ரசீது, இளம் புழுக்கள் பெற்றதற்கான மைய ரசீது, அங்காடிகளில் பட்டுக் கூடுகள் விற்பனை செய்த ரசீதுகளை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். 2017 ஏப்ரல் முதல் 2018 மார்ச் வரை ஒரு ஏக்கரில் மொத்தம் அறுவடை விபரம், பட்டுக்கூடு விற்பனை செய்த வருமானம் ஆகியவை மதிப்பீடு செய்யப்படும்.மேலும் பட்டு வளர்ச்சி துறையினரால் வழங்கப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிகமான உற்பத்தி மற்றும் லாபம் அடைந்த விவசாயிகளில் மாவட்ட, மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கும் பரிசு வழங்கப்படும்.சிறந்த விவசாயிகளை தேர்ந்தெடுக்க மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் தனித்தனியே தேர்வுக்குழு அமைக்கப்பட உள்ளது. சிறந்த விவசாயி தேர்வு செய்யப்பட்ட பின், அவர் சமர்ப்பித்த தகவல்கள் தவறானது என தெரிந்தால் சம்பந்தப்பட்ட இளநிலை ஆய்வாளர், தொழில்நுட்ப சேவை மைய பொறுப்பாளர், உதவி இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.பரிசுகள் விபரம்'மாநில அளவில் முதல் பரிசு ரூ.ஒரு லட்சம், 2ம் பரிசு ரூ.75 ஆயிரம், 3ம் பரிசு ரூ.50 ஆயிரம், மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.25 ஆயிரம், 2ம் பரிசு ரூ.20 ஆயிரம், 3 ம் பரிசு ரூ.15 ஆயிரமாக வழங்கப்படும். பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 2018, மார்ச் 15 க்குள் மாவட்ட பட்டு வளர்ச்சி துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்' என, பட்டு வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை