வாக்காளர் பெயர் சேர்க்க ஜன.20வரை அவகாசம் முப்படை வீரர்களுக்கு அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பெயர் சேர்க்க ஜன.20வரை அவகாசம் முப்படை வீரர்களுக்கு அறிவிப்பு

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி முப்படையினர், உள்நாட்டு பாதுகாப்புத்துறையினர், வெளியுறவுத் துறைகளில் பணிபுரிவோர் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க ஜன.16 முதல் 20 வரை கால அவகாசம் வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது'சர்வீஸ் ஓட்டர்ஸ்' எனப்படும் முப்படை வீரர்கள், அதன் அதிகாரிகள், உள்நாட்டு பாதுகாப்பு துறையினர், இந்திய வெளியுறவுத்துறைகளில் வெளிநாடுகளில் பணிபுரிவோரின் பெயர்கள் அடங்கிய இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.31ல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.முப்படைகளின் வீரர்களுக்கு படிவம் 2, அவர்களது மனைவிகளுக்கு மட்டும் படிவம் '2ஏ', வெளிநாடு வாழ் அரசு ஊழியர்களுக்கு படிவம் 3லும் பதிவு விபரங்களை பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட தேர்தல் பிரிவுகளில் நேரில் வழங்க வேண்டும் அல்லது தபாலில் அனுப்ப வேண்டும்.இந்த விபரங்களை ஆய்வு செய்து தேர்தல் அதிகாரிகள், முப்படைகளின் கமாண்டர்களுக்கு ஜன. 21ல் அனுப்ப வேண்டும். அதனை கமாண்டர்கள் ஆய்வு செய்து ஜன.,25க்குள் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துருக்களை எழுத்துப் பூர்வமாக தேர்தல் பிரிவுக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பின் அவர்களுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.,31ல் வெளியிடப்பட உள்ளது.தேனி மாவட்ட தேர்தல் தாசில்தார் சத்தியபாமா கூறுகையில், 'இந்த வாய்ப்டை படை வீரர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை