மதுரை துணிக்கடையில் பயங்கர தீ விபத்து| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை துணிக்கடையில் பயங்கர தீ விபத்து

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மதுரை துணிக்கடையில் பயங்கர தீ விபத்து

மதுரை, மதுரை விளக்குத்துாண் பகுதியில் உள்ள ஜே.ஆர்.கே. துணிக்கடையில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள துணிகள் சேதமாகின. ஏழு மணி நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது.மதுரை மஞ்சனக் காரத்தெருவைச் சேர்ந்தவர் கணேஷ்,55. பத்துதுாண் சந்தில் குறுகலான தெருவில் ஜே.ஆர்.கே. டெக்ஸ்டைல் என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வருகிறார். மூன்று தளங்களை கொண்டது. இங்கிருந்து வெளியூர்களுக்கும் துணிகள் அனுப்பப்படுகின்றன.நேற்று அதிகாலை 4:30 மணிக்கு கடைக்குள் இருந்து புகை வருவதாக, பக்கத்து கடைகளில் தங்கியிருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். எட்டு வண்டிகள் மூலம் தீ அணைக்கும் பணி துவங்கியது.கடை குறுகலான தெருவில் இருந்ததால், தீயணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் மகால் வடம்போக்கித்தெருவில் வண்டியை நிறுத்தி, அங்கிருந்து நீண்ட 'ஹோஸ்' மூலம் தீயணைக்கும் பணி நடந்தது. நேற்று காலை 11:30 மணிக்கு தீ அணைக்கும் பணி முடிந்தது. முதற்கட்ட விசாரணையில், மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்தது. அதிகாலையில் தீப்பிடித்ததால், உயிர்சேதம் இல்லை.கடை நிர்வாகிகள் கூறியதாவது: தினமும் இரவு மின் இணைப்பையும், யூ.பி.எஸ்சையும் அணைத்துவிட்டுதான் செல்வோம். நேற்றுமுன்தினம் இரவும் அப்படிதான் சென்றோம். அதனால் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என தெரியவில்லை. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மூன்று தளங்களிலும் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள துணிகள் வைத்திருந்தோம். அனைத்தும் சேதமாகி விட்டன, என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை