'ஒக்கி' புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வழக்கு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'ஒக்கி' புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வழக்கு

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மதுரை, 'ஒக்கி' புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க தாக்கலான வழக்கு விசாரணையைசென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.கூத்தன்குழியை சேர்ந்த கதிரவன் ராயன் தாக்கல் செய்த பொதுநல மனு:'ஒக்கி' புயலின்போது கடலில் மீன் பிடிக்கச் சென்றிருந்த தமிழக மீனவர்களை மீட்க, மாநில அரசு பெயரளவில்தான்முயற்சித்தன. இந்திய கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படையின் துணையுடன் கேரள மீனவர்களை தேடும்பணியை அம்மாநில முதல்வர் முடுக்கிவிட்டார். இறந்த கேரள மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம், நிரந்தரஊனமடைந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு உட்பட பல்வேறு நிவாரணங்களை அம்மாநில அரசு அறிவித்தது.தமிழகத்தில், பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டைதாமதமாக மாநில அரசு அறிவித்தது. கேரளாவைப்போல் இழப்பீடு வழங்கவேண்டும். 'ஒக்கி' புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். மாயமான மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கதிரவன்ராயன் மனு செய்திருந்தார்.தக்கலை வழக்கறிஞர் புகழ் காந்தி,'ஒக்கி' புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவர்கள் அல்லாதவர்களுக்கு பாகுபாடின்றி 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்,' என மனுசெய்திருந்தார்.நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர். ேஹமலதா அமர்வு, 'இதுபோன்ற வழக்குகள்சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில்உள்ளன. அத்துடன் இம்மனுக்களையும் சேர்த்து விசாரிக்க, அங்கு அனுப்ப பதிவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை