'மொபைல் - ஆதார்' இணைப்பது இனி எளிது! | Dinamalar

பொது செய்தி

இந்தியா

'மொபைல் - ஆதார்' இணைப்பது இனி எளிது!

Updated : ஜன 05, 2018 | Added : ஜன 04, 2018 | கருத்துகள் (35)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 ஆதார் அட்டை, Aadhaar card, மொபைல் எண், Mobile Number, மத்திய அரசு,Central Government, யு.ஐ.டி.ஏ.ஐ.,UIDAI, மொபைல் ஆதார் இணைப்பு , Aadhaar Mobile,

மொபைல் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம். 2017 டிசம்பருக்குள் இணைக்காவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என, மத்திய அரசு எச்சரித்தது.

அதனால், அந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர் மையங்களில், மக்கள் முட்டி மோதினர். இதையடுத்து, அதற்கான கெடு, வரும் மார்ச் இறுதி வரை நீட்டிக்கப்பட்டது.இந்த சூழலில், ஆதார் எண்ணுடன், வாடிக்கையாளரே, மொபைல் எண்ணை இணைக்கும் வகை யில், மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, '14546' என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை, மொபைலில் அழைத்தால், பதிவு செய்யப்பட்ட குரல் சேவை ஒலிக்கும்.

அதில், விருப்ப மொழியை தேர்ந்தெடுத்து, உங்கள் ஆதார் எண்ணை, 'டைப்' செய்ய வேண்டும். அது, உடனடியாக தனித்துவ அடையாள எண் ஆணையமான, யு.ஐ.டி.ஏ.ஐ.,க்கு அனுப்பப்படும்.அது, தகவல்களை உறுதி செய்ததும், 'ஒன் டைம் பாஸ்வேர்டு' மொபைல் போனுக்கு வரும். அந்த எண்ணை உடனே, 'டைப்' செய்து அனுப்பிய பின், இணைப்பை துண்டிக்கலாம். அடுத்த நிமிடத்தில், உங்கள் எண், ஆதாருடன் இணைத்ததை உறுதி செய்து, எஸ்.எம்.எஸ்., செய்தி வரும். சில நிமிடங்களில் இதைச் செய்து விடலாம்.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mathan - Chennai,இந்தியா
04-ஜன-201820:30:46 IST Report Abuse
Mathan தமிழக மக்களே என்று நீங்கள் அரசை குறை கூறுவதை நிறுத்துவீர்கள் .. அனைத்திலும் காவி காவி.. ஹிந்துக்கள் ஆண்டால் தான் என்ன? ஆதார் காரணமாக 59000 கோடி செலவு மிச்சம் என்று நந்தன் நிலகேனி கூறினார்.. 1 .7 % பேர் தான் IT காட்டி உள்ளனர்.. இப்போது நீங்கள் கூறுங்கள் இதில் கருத்து தெரிவித்த எத்தனை பேரு IT காட்டினார் .உங்கள் உறவினர் நண்பர் உங்களை சுற்றி இருப்பவர் அனைவரும் சரியாக உள்ளனரா? நம் அழுக்கை சுத்தம் செய்து விட்டு மற்றவரை குறை கூறலாம்.. ஊழலே வாழ்க்கை என்ற திராவிட கட்சிகளுக்கு காவி எவ்வளவோ பரவலை..
Rate this:
Share this comment
Rajathiraja - Coimbatore,இந்தியா
04-ஜன-201821:28:49 IST Report Abuse
Rajathirajaசட்டம் போடுற அரசியவாதி முதலில் யோக்யனாக இருக்க வேண்டும். அதை பார்த்து மக்கள் தானாக திருந்துவார்கள். இந்த ஆதார் இணைக்கும் வசதியை பிரைவேட் மொபைல் நிறுவனங்கள் நடைமுறை படுத்திவிட்டார்கள் ஆனால் BSNL இன்னும் தூங்கிக்கொண்டிருக்கின்றது. இதே நிலைமை தான் அரசும் அரசை சார்ந்த துறைகளும்....
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
04-ஜன-201817:59:52 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM ஆதார் வாங்கி சிம் தருகிறார்களே, இனிமேல் எல்லாம் நேர்மையாக நடக்கும் என்றால், எனக்கு வரும் கால், எவனிடம் இருந்து வருகிறது, ?. எந்த டவர் அமைந்துள்ள இடத்தில இருந்து வருகிறது? என்ற அடிப்படை தகவலும் இனி எனக்கு தேவை... நேர்மையான , யோக்கிய சிகாமணி அரசு , இனி , மக்களுக்கு வரும் கால், யாரிடம் இருந்து வருகிறது , அவனது ஆதார் பெயருடன், அவன் எங்கிருந்து பேசுகிறான் என்ற தகவலையும் போன் வரும்போதே DISPLAY யில் காட்டுவார்களா ?... ஜெயகுமார ஜெயசேகரன் திருச்சி மலைக்கோட்டை அருகில் இருந்து உங்களை அழைக்கிறார் என்று டிஸ் பிளேயில் வருமா?... அப்படி வந்தால் தான் பயன்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பு ....பல குற்றங்கள் குறையும்...
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
04-ஜன-201817:53:51 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM இந்த முறையை முன்னரே செய்திருக்கலாமே ?... இவ்வளவு காலமும் மக்களை அலையவிட்டுவிட்டு , இன்னும் 2 மாதமே பாக்கி உள்ள நிலையில், இந்த திட்டத்தை சொல்கிறார்கள்... உலகிலேயே மொபைல் நம்பர் பெற கைநாட்டு வாங்கிய நாடு இந்தியாவாக தான் இருக்கும்... லைனில் நின்று கூனி குறுகி தான் கைநாட்டு வைக்க வேண்டியது இருந்தது... சிப்பந்திகளுடன் வாக்குவாதம் வேறு..... ஒரு நாளை மெனக்கெடவைத்தது கூட பரவாயில்லை... ஆனால், கைநாட்டு வைக்க வைத்து விட்டார்கள்... நாம் என்ன தீவிரவாதிகளா?.. இந்த அரசு மக்களை தீவிரவாதிகளாக கருதுகிறதா?... தீவிரவாதிகள் எதுக்கு லைனில் நின்று சிம் நம்பர் வாங்க போகிறான்... ?.. அப்பாவிகள் எவனிடமாவது இருந்து சிம் பெற்று அதனை யூஸ் பண்ணுவான்... தப்பு பண்ணுகிறவனை பிடிக்காமல், அனைவரையும் தண்டிக்கும் அரசு உலகிலேயே இந்த பாஜக அரசு தான் ...ஆதார் விஷயத்திலும் சரி... நோட்டு முடக்கத்திலும் சரி பாதிக்கப்படுகிறவர்கள், சாமானியன்கள் தான்... தெரு தெருவாக அலைந்தது மறக்கவில்லை ...
Rate this:
Share this comment
Praveen Swedaranyam - Riyadh,சவுதி அரேபியா
04-ஜன-201819:51:03 IST Report Abuse
Praveen Swedaranyamமத்திய கிழக்கு நாடுகளில் (சவூதி அரேபியா , பஹ்ரைன்) கைரேகை பதிவு நடைமுறையை அமுல்படுத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிறது, ஒருவருக்கு மூன்று சிம் கார்டுகளை மட்டுமே பெறமுடியும். ரிச்சார்ஜ் செய்வதற்கு இக்காமா எண் ( ஆதார் எண் ) பயன்படுத்த வேண்டும்....
Rate this:
Share this comment
Ivan - ,
05-ஜன-201805:25:33 IST Report Abuse
IvanEn ipdi polambu ra? Paavama iruku unna paatha....
Rate this:
Share this comment
Cancel
டுமீலிசை பாஸ்கர் - Singapore,சிங்கப்பூர்
04-ஜன-201816:31:03 IST Report Abuse
டுமீலிசை பாஸ்கர் மக்கள் காவி விளம்பரங்களை கண்டு ஏமாறாமல் நேரடியாக மொபைல் நிறுவனத்துக்கு சென்று பாதுகாப்பாக ஆதாரை இணைத்து கொள்ளவும்.அதுவே புத்திசாலித்தனம்.
Rate this:
Share this comment
Cancel
டுமீலிசை பாஸ்கர் - Singapore,சிங்கப்பூர்
04-ஜன-201816:29:17 IST Report Abuse
டுமீலிசை பாஸ்கர் 14546 காவிக்கட்சியின் நம்பராக இருக்கும் அதில் உங்கள் ஆதார் எண்ணை பதிவிட்டுவிட்டால் நீங்கள் காவி கட்சியின் உறுப்பினராகி அடுத்த தேர்தலில் உங்கள் வாக்கு காவிக்கட்சிக்கு விழும் அளவு மென்பொருள் தயார்செய்யப்பட்டு இந்தியா முழுதும் காவிக்கட்சியின் ஆட்சியாக மாறி இந்துத்துவா கொண்ட இந்து நாடாக பிரகடனப்படுத்தப்படும்..திமுக கருணாநிதி ஒரு விஞ்ஞான திருடர் முன்னேற்றக்கழகத்தை கொண்டவர் என்றால் மோசடி ஆட்சியில் மக்கள் நூதனமாக மோசடி செய்யப்பட்டு மக்களும் நாடும் லவட்டபப்டும்.
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
04-ஜன-201816:22:13 IST Report Abuse
vnatarajan BSNL ல் 14546 என்ற எண் இல்லை என்று வருகிறது .காரணம் தெரியவில்லை
Rate this:
Share this comment
Cancel
Rajathiraja - Coimbatore,இந்தியா
04-ஜன-201815:54:03 IST Report Abuse
Rajathiraja வழக்கம் போல BSNL இதிலேயும் மந்தம் தான். இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை.
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
04-ஜன-201815:05:55 IST Report Abuse
spr அண்மையில் ஏர்டெல் மக்களின் எரிவாயு இணைப்புக்கான 167 கோடி ருபாய் மானியத்தை சுருட்டிவிட்டதாக செய்தி வெளி வந்தது ஆனால் அண்மையில் எனது எரிவாயு மானியம் ஒரு தனியார் வங்கியிலிருந்து ஆக்சிஸ் வங்கிக்கு தானாக எனக்குத் தெரியாமல் மாற்றப்பட்டிருக்கிறது இது அண்மையில் ஆக்சிஸ் வங்கியில் எனது ஆதார் எண்ணை இணைத்தபின்னரே நடந்துள்ளது இதற்கு A தொடங்கி Z ல் முடியும் வகையில் வங்கிகளை வரிசைப்படுத்தும் இந்தேன் எரிவாயு பயன்படுத்தும் மென்பொருள் நிரலி காரணமாக இருக்குமோ? A வில் தொடங்கும்வங்கிகளில் நமது ஆதார் எண் இணைக்கப்பட்டிருந்தால், அந்த மென்பொருள் நிரலிகள் நமது மானிய பணத்தை ( அந்த வரிசையில் நமது வாங்கி H ல் தொடங்கினாலும்) முதலில் A வில் தொடங்கும் முதல் வங்கியிலேயே செலுத்திவிடுகிறதோ ??? ஏர்டெல்லில் இப்படி பணம் செலுத்தப்பட்டவர்கள் அந்த அமைப்பில் Airtel Money கணக்கு வைத்திருந்தார்களோ? அதனால் ஆதார் இணைப்பு செய்தவுடன் தன்னிச்சயாக கணினி அந்த கணக்கில் செலுத்திவிட்டதோ? தெரிந்தவர்கள் சொல்லுவார்களா
Rate this:
Share this comment
Narayanan.S - Chennai,இந்தியா
04-ஜன-201816:47:51 IST Report Abuse
Narayanan.Sஎன்னுடையது இந்தியன் பேங்க் ல் இருந்து HDFC ஆக மாறிவிட்டது...
Rate this:
Share this comment
Gopi - Chennai,இந்தியா
04-ஜன-201817:50:59 IST Report Abuse
Gopiபாஸ் நீங்க கிட்ட நெருங்கிடீங்க . சிரிப்புக்கு சொல்லல எனக்கு தெரிஞ்சு ஆதார் மானிய மென்பொருள் கடைசியாக எந்த வங்கியில் நாம் இணைக்கிறோமோ அங்கு மானியத்தை மாற்றும் என்பது. ஆனால் அதுவும் உண்மையில்லை என்றே தோணுகிறது . ஏனெனில் இண்டேன் அல்லது எந்த எரிவாயு கம்பெனி தரவில் (database ) உங்கள் IFSC code பதிவு செய்துள்ளீர்களோ அதற்குத்தான் முக்கியத்துவம் (overriding logics discussed here ). ஆனால் இதற்கெல்லாம் மாறாக Airtel பலான வேலை பார்த்ததாகத்தான் செய்தி கசிந்தது...
Rate this:
Share this comment
Cancel
04-ஜன-201813:30:06 IST Report Abuse
Santhakumarsrinivasalu internet not working/ slow is real fact
Rate this:
Share this comment
Cancel
Santhakumar -  ( Posted via: Dinamalar Android App )
04-ஜன-201813:26:36 IST Report Abuse
Santhakumar internet slow / not working properly is the real fact. No body is caring for this. Low class & Uneducated are suffering more.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை