உள்ளாட்சி அதிகாரிகள் பதவி 6 மாதங்கள் நீட்டிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி அதிகாரிகள் பதவி 6 மாதங்கள் நீட்டிப்பு

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை, உள்ளாட்சி அதிகாரிகளின் பதவிக்காலம், மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், 12 மாநகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 12 ஆயிரத்து, 524 ஊராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் உள்ள, 1.30 லட்சத்திற்கும் அதிகமான பதவிகளுக்கான காலம், 2016 அக்., 24ம் தேதியுடன் நிறைவடைந்தது.புதியவர்களை தேர்வு செய்ய, தேர்தல் அறிவிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதன்பின், உள்ளாட்சிகளை நிர்வகிக்க, தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பதவிக்காலம், 2017 டிச., 31ல் நிறைவு பெற்றது. அதை தொடர்ந்து, மேலும் ஆறு மாதங்களுக்கு, அவர்களின் பதவிக்காலத்தை நீட்டித்து, அரசு உத்தரவிட்டு உள்ளது. அதற்கு முன், உள்ளாட்சி தேர்தல் வந்தால், தேர்தலுடன் பதவிக்காலம் முடியும். இல்லையெனில், ஜூன், 30 வரை, அவர்களின் பதவிக்காலம் நீடிக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை