சென்னையில் இருந்து 5,158 சிறப்பு பஸ்கள் பொங்கல் பண்டிகைக்காக அரசு ஏற்பாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் இருந்து 5,158 சிறப்பு பஸ்கள் பொங்கல் பண்டிகைக்காக அரசு ஏற்பாடு

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன், கூடுதலாக, 5,158 சிறப்பு பஸ்களை இயக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.சென்னை, பல்லவன் இல்லத்தில், நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின், போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கூறியதாவது:சென்னையில் இருந்து தினமும், 2,275 பஸ்கள், வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையையொட்டி, வரும், 11ம் தேதி, 796; 12ம் தேதி, 1,980; 13ம் தேதி, 2,382 என, மொத்தம், 5,158 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. வழக்கமாக, மூன்று நாட்களிலும் இயக்கப்படும் பஸ்களையும் சேர்த்து, மொத்தம், 11 ஆயிரத்து, 983 பஸ்கள் இயக்கப்படும்.அதற்காக, கோயம்பேடு பஸ் நிலையத்தில், 26; தாம்பரம் சானிட்டோரியம் பஸ் நிலையத்தில், 2; பூந்தமல்லி பஸ் நிலையத்தில், ஒன்று என, 29 முன்பதிவு மையங்கள், வரும், 9ம் தேதி முதல் செயல்படும். அதேபோல, மற்ற ஊர்களில் இருந்து, 11ம் தேதி, 1,405; 12ம் தேதி, 3,656; 13ம் தேதி, 5,376 என, மொத்தம், 10 ஆயிரத்து, 437 சிறப்பு பஸ்களை இயக்கவும், அரசு திட்டமிட்டுள்ளது.பொங்கலுக்கு பின், 15, 16, 17ம் தேதிகளில், முறையே, 792; 1,548; 1,430 என, மொத்தம், 3,770 சிறப்பு பஸ்கள், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து, சென்னைக்கு இயக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை