மதுரை வைகையில் 'செல்பி' சிறுவன் எலும்புக்கூடாக மீட்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை வைகையில் 'செல்பி' சிறுவன் எலும்புக்கூடாக மீட்பு

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, மதுரை ஆழ்வார்புரம் வைகையாற்றில் 'செல்பி' எடுத்து மாயமான ஜெயசூர்யா,14, உடல் நேற்று சிலைமான் பகுதியில் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர்ருக்மணி. இவரதுமகன் ஜெயசூர்யா.மதுரை கோரிப்பாளையம் உறவினர் வீட்டிற்குடிச.,7ல் சென்றார். அப்போதுவைகை ஆற்றில் தண்ணீர் ஓடுவதை பார்க்க உறவினருடன் ஜெயசூர்யாசென்றார். ஆற்றில் அழகர் இறங்கும் இடம் அருகே'செல்பி'எடுத்தபோது, மண் சரிந்தது. ஜெயசூர்யா தவறி தண்ணீரில் விழுந்தார். ஆற்றில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடிய வில்லை. மதிச்சியம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 3 நாட்கள் தேடுதலுக்கு பிறகும் உடல் கிடைக்காததால் முயற்சியை கைவிட்டனர்.இதைதொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மகனை ஆஜர்படுத்தக்கோரி ருக்மணி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் நேற்று மாலை சிலைமான் போலீஸ் ஸ்டேஷன் எதிரே ஆற்றில் எலும்புக்கூடு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அரைஞாண் கயிறு, செருப்பு, ஆடை உள்ளிட்டவைகளை வைத்து அது ஜெயசூர்யாவின் எலும்புக்கூடுதான் என்பதை அவரது குடும்பத்தினர் உறுதி செய்தனர். இருப்பினும், மருத்துவ ரீதியாக உறுதி செய்ய டி.என்.ஏ., சோதனைக்கு போலீசார் பரிந்துரைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை