ரஜினி அரசியல் பிரவேசம் உளவுத்துறை சர்வே தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரஜினி அரசியல் பிரவேசம் உளவுத்துறை சர்வே தீவிரம்

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல், ரஜினி அரசியலில் நுழைந்துள்ளது குறித்து உளவுத்துறை போலீசார் 'சர்வே'யில் இறங்கியுள்ளனர்.இதோ, அதோ என போக்குக் காட்டிய நடிகர் ரஜினி, அரசியலுக்கு வரமாட்டார் என்று நம்பியவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அரசியலில் குதித்தே விட்டதாக அறிவித்துள்ளார். இது ஆட்சிக் கனவில் உள்ள அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. உட்பட பல கட்சிகளுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உளவுத்துறை சர்வேதமிழகத்தில் கடந்த 1996ல் ரஜினி வாய்சால் தி.மு.க., வெற்றி பெற்றது. அப்போது ரஜினி, கமல் மட்டுமே திரையுலக கதாநாயகர்களாக இருந்தனர். தற்போது விஜய், அஜித், விஷால் என பல நடிகர்கள் ரசிகர்கள் மன்றங்களையும் வைத்துள்ளனர்.இப்படிப்பட்ட சூழலில் ரஜினி அரசியலுக்கு வருவதால், அது எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என அதிகாரத்தில் உள்ளவர்களால் கணிக்க முடியவில்லை. அவரது வரவு குறித்து பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள். குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் மத்தியில் எப்படிப்பட்ட தாக்கத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார்.ஊழலற்ற அரசியல் என்ற ரஜினியின் வாதம் எடுபடுகிறதா என்பது குறித்தும் உளவுத்துறை போலீசார் சர்வே எடுத்து வருகின்றனர். விரைவில் அதைஅரசிடம் அறிக்கையாக வழங்க உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X