அரசு மருத்துவமனைகளில் வீல் சேர்கள் உள்ளனவா| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனைகளில் வீல் சேர்கள் உள்ளனவா

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் போதிய'ஸ்ட்ரெச்சர்கள்', 'வீல் சேர்கள்' உள்ளவனா? என அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் வெங்குளம் ராஜூ, 'கீழக்கரை, ஏர்வாடி அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள், லேப்டெக்னீசியன்கள் உட்பட காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை கோரி சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,' என மனு செய்திருந்தார்.தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் மற்றும் இதரக் காலிப் பணியிடங்களை நிரப்ப மேற்கொண்டநடவடிக்கைகள் குறித்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவுப்படி சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் 2017ல் அறிக்கை தாக்கல் செய்தார்.நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ேஹமலதா அமர்வு, 'மாநிலத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கான'ஸ்ட்ரெச்சர்கள்', 'வீல் சேர்கள்' போதிய அளவு உள்ளவனா? இல்லையெனில் அவற்றை பூர்த்தி செய்ய மேற்கொள்ளப்பட்டநடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஜன.,29 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,' என உத்தரவிட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை