சங்கரரின் பாதுகையை தலையில் சுமந்த கலெக்டர்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சங்கரரின் பாதுகையை தலையில் சுமந்த கலெக்டர்

Updated : ஜன 04, 2018 | Added : ஜன 04, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சங்கரர்,Shankarar, கலெக்டர் சூபியா பாரூக்கி, Collector Sufia Barooki, பாதுகைகள், மத்திய பிரதேசம்,Madhya Pradesh,  நர்மதை ஆறு,Narmada river, ஜீவாத்மா, பரமாத்மா, சர்வக்ஞான பீடம்,  முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்,  Chief Minister Shivraj Singh Chouhan,

மண்ட்லா: மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், கண்ட்வா மாவட்டம், ஓம்காரேஷ்வரில், நர்மதை ஆற்றங்கரையில், ஆதி சங்கரருக்கு, 108 அடி உயர சிலை அமைக்கும் பணி, கடந்த ஆண்டு ஜனவரியில் துவங்கியது.
மாநிலம் முழுவதும், ஆதி சங்கரர் சிலை வடிவமைப்பதற்கு தேவையான உலோகங்கள் சேகரிப்பு மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் நடந்து வருகிறது. ஒருங்கிணைந்த யாத்திரை மூலம், இந்த பிரசாரத்தில் மக்கள் இணைக்கப்படுகின்றனர்.இந்த பிரசார யாத்திரையில், ஆதி சங்கரரின் பாதுகைகள் ஊர்வலமாக எடுத்து வரப்படுகின்றன. சமீபத்தில், டிண்டோரி மாவட்டத்தில் இருந்து, மண்ட்லா மாவட்டத்திற்கு வந்த பாதுகை அடங்கிய பெட்டிக்கு, மண்ட்லா கலெக்டர், சூபியா பாரூக்கி, பூஜை செய்து வரவேற்றார். பின், பாதுகை உள்ள பெட்டியை, தன் தலையில் வைத்து, ஊர்வலமாக எடுத்து வந்தார்.பாதுகையை தலையில் எடுத்து வரும் கலெக்டரின் புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றது. கலெக்டரை, பொது மக்கள் பாராட்டிஉள்ளனர்.

கேரள மாநிலம், காலடியில் பிறந்த, ஆதி சங்கரர், 'ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்று தான்' என்ற அத்வைத தத்துவத்தை உலகிற்கு எடுத்துக்காட்டியவர். நாடு முழுவதும் அத்வைத தத்துவத்தை பரப்புவதற்காக, கர்நாடக மாநிலம், சிருங்கேரியில் சாரதா பீடம், குஜராத் மாநிலம், துவாரகையில், துவாரகா பீடம், உத்தரகண்ட் மாநிலத்தில், ஜோஷி மடம், ஒடிசா மாநிலம் புரியில், கோவர்த்தன பீடம் என, நான்கு திசைகளில் மடங்களை நிறுவினார். தமிழகத்தில், காஞ்சிபுரத்தில், 'சர்வக்ஞான பீடம்' எனும் வேதாந்த கல்வி நிலையத்தை நிறுவினார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guru Ashok - Madurai,இந்தியா
06-ஜன-201817:53:15 IST Report Abuse
Guru Ashok அறிவில் வளர்ச்சி அறிவு இருக்கிறது என்பவனுக்கு புகட்டப் படும். நீதி நிலை நாட்டப் படும். எழுதியவனுக்கு என்ன எழுதினோம் என்பதே தெரியாது. அதற்குத்தான் இத்துனை விஞ்ஞான வளர்ச்சி. நரம்பியல் அறிய நாசமானவன் மோசம்போனவன் முகங்கள் தோலுரிக்கப் படும். எல்லை எதற்கும் உண்டு. எம்மொழியாயினும் உண்டு.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
05-ஜன-201805:57:53 IST Report Abuse
Bhaskaran உடனே மேடைபோட்டு அவரை வசைபாடி கண்டனத்தீர்மானம் நிறைவேற்ற வீரமணி தயாராக இருப்பார் இதற்கு எதிர்ப்புத்தரும் முகமாக பெரியாரின் பயன்படுத்திய கைத்தடி மற்றும் மூத்திர வாளியடன் ஒரு ஊர்வலம் நடைபெறும் என்பதை விரைவில் எதிர்பார்க்கலாம் (தலைமை முன்னாள் பகுத்தறிவு நீதிபதிகள் மற்றும் சத்தியராஜ் சீமான் )
Rate this:
Share this comment
Cancel
Shiv Ram - Chennai,இந்தியா
04-ஜன-201821:12:01 IST Report Abuse
Shiv Ram இந்தியா முழுவதிலும் இந்து மதத்திற்கு வலு சேர்த்த ஆதி சங்கரர் பிறந்த கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், "காலடி" மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளெல்லாம் தற்பொழுது கிருத்துவ பெரும்பான்மை பகுதிகளாகிவிட்டது. காலடியை சுற்றிலும் பெரியார் நதியின் கரையோரங்களிலெல்லாம் நூற்றுக்கணக்கான சர்ச்சுகள். பெரும்பாலான மக்கள் திட்டமிட்டே பிரிட்டிஷ், டச்சு, போர்த்துகீசியர் மற்றும் திப்பு சுல்தான் போன்றவர்களால் மதம் மாற்றப்பட்டு விட்டனர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X