அமைச்சரவை கூட்டம்: புறக்கணித்த அமைச்சர் | Dinamalar

அமைச்சரவை கூட்டம்: புறக்கணித்த அமைச்சர்

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஆமதாபாத், குஜராத் அமைச்சரவையில், ஒரு துறை மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால், கடும் அதிருப்தியில் உள்ள, பா.ஜ.,வைச் சேர்ந்த, கோலி சமூகத் தலைவர், புருஷோத்தம் சோலங்கி, அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.குஜராத்தில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி, மீண்டும் ஆட்சியை பிடித்தது. முதல்வராக, விஜய் ரூபானியும், துணை முதல்வராக, நிதின் படேலும் மீண்டும் பதவியேற்றனர். கடந்த முறை ஒதுக்கப்பட்ட நிதித்துறை, தற்போது ஒதுக்கப்படாததால், துணை முதல்வர் நிதின் படேல் கடும் அதிருப்தி அடைந்தார். அவரை, பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷா சமாதானப்படுத்தி, அவருக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்களை ஏற்கச் செய்தார். அவருக்கு, நிதித்துறை மீண்டும் ஒதுக்கப்பட்டது.இந்நிலையில், கோலி சமூகத்தைச் சேர்ந்த, பா.ஜ., மூத்த தலைவரான, புருஷோத்தம் சோலங்கி, தனக்கு மீன்வளத் துறை மட்டுமே ஒதுக்கப்பட்டதால், கடும் அதிருப்தியில் உள்ளார். எம்.எல்.ஏ.,வாக, ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தனக்கு, ஒரு துறை மட்டும் ஒதுக்கப்பட்டதால், கோலி சமூகத்தினர் வருத்தத்தில் உள்ளதாக, சோலங்கி குற்றஞ்சாட்டி உள்ளார்.இந்நிலையில், ஆமதா பாதில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்காமல், சோலங்கி புறக்கணித்தார். அவர் கூறுகையில், ''கோலி சமூகத்தைச் சேர்ந்த நான் ஒருவன் மட்டுமே அமைச்சராகி உள்ளேன். 2019ல் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கு முன், யாரை ஆதரிப்பது என முடிவு செய்ய வேண்டிய நிலையில், கோலி சமூகத்தினர் உள்ளனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X