இறுக்கமான 'புர்கா' அணிய தடை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இறுக்கமான 'புர்கா' அணிய தடை

Added : ஜன 04, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சஹாரன்பூர், உ.பி.,யில், முஸ்லிம் பெண்கள் இறுக்கமான, 'புர்கா' அணிவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள, புகழ்பெற்ற இஸ்லாமிய கல்வி நிறுவனமான, தாருல் உலுாம் நிறுவனம் பிறப்பித்த உத்தரவில், 'முஸ்லிம் பெண்கள், இறுக்கமான, மினு மினுப்பான, 'புர்கா' அணியக் கூடாது' என, கூறியுள்ளது.இது குறித்து, தாருல் உலுாம் நிறுவன தலைவர், முப்தி யாதே இலாஹி காஸ்மி கூறியதாவது:பள்ளி, கல்லுாரி செல்லும் முஸ்லிம் மாணவியர், 'புர்கா' என்ற பெயரில், நவநாகரிகமாக, இறுக்கமாக அணிகின்றனர். இவ்வாறு அணிவது குற்றம். எனவே, பெண்கள், வீட்டில் இருந்து வெளியில் வரும் போது, உடல் முழுவதையும் மறைக்கும்படியான, தளர்வான, பிறரை கவராத வகையிலான, 'புர்கா'வை அணிய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
04-ஜன-201823:09:55 IST Report Abuse
Vijay D Ratnam பாவம் சார் அந்த பெண்கள். புர்காவே அடிமை சின்னம். அவுங்க என்ன விரும்பியா அணிகிறார்கள். மதகுரு என்ற பெயரில் படிப்பறிவில்லாத தற்குறிகள் மதத்தின் பெயரால் செய்யும் டார்ச்சர். அதுல கொஞ்சம் ரிலாக்ஸ் அவ்ளோதான். எல்லா பெண்களும் ஆசைபடுவது மாதிரி அவர்களும் மற்றவர்களை கவரும் படி நேர்த்தியாக இருக்கவேண்டும் என்று ஆசைபடுவதில் தப்பில்லை. இது நேச்சர்.
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
04-ஜன-201812:17:55 IST Report Abuse
Cheran Perumal இது தனி மனித சுதந்திரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாது
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-ஜன-201802:55:09 IST Report Abuse
தமிழ்வேல் ரொம்பதான் இந்த கொசு தொல்லை.. இதையெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.. தீவிரவாதத்துக்கு எதிரா ஓன்னு சேர்ந்து அப்பப்ப கருத்து சொல்லுங்க தலைவர்களே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை