தொல்லியல் ஒப்புதல் திருப்பணிக்கு கட்டாயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொல்லியல் ஒப்புதல் திருப்பணிக்கு கட்டாயம்

Added : ஜன 04, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

'அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, அனைத்து கோயில்களிலும், திருப்பணி மேற்கொள்ள, இனி, தொல்லியல் வல்லுனர்குழு ஒப்புதல் பெற வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, அறநிலைய அதிகாரிகள் கூறியதாவது:கோயில் திருப்பணி முறையாக நடப்பதில்லை என, புகார்கள் வருகின்றன. இது தொடர்பாக, நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், அறநிலையத்துறை கமிஷனர், ஜெயா, அனைத்து கோயில்களுக்கும், சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில், 'திருப்பணிகள் குறித்த அறிக்கையை, தொல்லியல் வல்லுனர் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். கோயில் தல வரலாறு, வரைபடம், அதன் சிறப்பு, உத்தேசிக்கப்பட்ட திருப்பணி வரைபடம் ஆகியவற்றையும் அனுப்ப வேண்டும். பின், குழு ஆய்வு செய்து, உரிய அறிவுரை வழங்கும். அதன்படியே, திருப்பணி மேற்கொள்ள வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.மேலும், திருப்பணிகளை, வல்லுனர் குழு நேரில் பார்வையிடும். இந்த நடைமுறையால், திருப்பணியில் குளறுபடி, விதிமீறல் எதுவும் நடக்காது, என்று அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
04-ஜன-201819:12:25 IST Report Abuse
Bhaskaran அப்படியே சிலைகளையும் சிற்பத்தூண்களையும் சுத்தம் செய்கிறோம் என்று sandblast மூலம் அதிக அழுத்தத்தில் செய்யும் போது நுணுக்கமான நாகசுவேலைப்பாடுகளும் சிற்பங்களின் முக அழகும் நாசமாகப்படுகிறது எனவே இதை அறவே நிறுத்த வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை