கொற்றலை ஆற்று பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்! 8 கிராமத்தினர் ஆற்றில் இறங்கி போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொற்றலை ஆற்று பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்! 8 கிராமத்தினர் ஆற்றில் இறங்கி போராட்டம்

Added : ஜன 04, 2018
Advertisement
கொற்றலை ஆற்று பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்! 8 கிராமத்தினர் ஆற்றில் இறங்கி போராட்டம்

சென்னை, கொற்றலை ஆற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, எட்டு மீனவ கிராமத்தினர், ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர்.கொட்டப்படும் கழிவுகளால், 15 ஆயிரம்மீனவர்கள் பாதிக்கப்படுவதாக கூறினர்.எண்ணுார் பகுதியில் இருந்து, கருங்காலி வரை உள்ள கொற்றலை ஆற்றில், முகத்துவாரகுப்பம், பெரியகுப்பம், தாழங்குப்பம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தினர், மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.வட சென்னை அனல் மின் நிலையங்கள், எண்ணுார் துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களின் வருகையால், மீனவர்கள் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டது.கொற்றலை ஆற்றில், வட சென்னை அனல் மின்நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதாலும், எண்ணுார் துறைமுகத்தின் விரிவாக்க பணிகளாலும், ஆற்றின் பகுதி சுருங்கி உள்ளது. இதனால், மீன்வளம் முற்றிலும் பாதித்து, மீனவர்கள், வருவாய் இழப்பை சந்தித்துள்ளனர்.கொற்றலை ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தரும்படியும், சாம்பல் கழிவுகளை கொட்டுவதற்கு தடை விதிக்கும்படியும், மேற்கண்ட மீனவ கிராமத்தினர்,தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.இது தொடர்பாக நேற்று, எண்ணுார் முகத்துவாரகுப்பம், காட்டுகுப்பம், தாழங்குப்பம் உள்ளிட்எட்டு மீனவ கிராமத்தினர், வடசென்னை அனல் மின் நிலையம் அருகே, சாண்டி முத்துமாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள கொற்றலை ஆற்றில் இறங்கி, மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.எண்ணுார் அனைத்து மீனவ கிராமங்கள் மற்றும் கொற்றலை ஆறு மீட்புக்குழு சார்பில் நடந்த போராட்டத்தில், 100க்கும் மேற்பட்ட படகுகளில், 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர். ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் செய்து, கலைந்து சென்றனர்.போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறியதாவது:எண்ணுார் பகுதியில் ஆறே இல்லை என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், 1996ம் ஆண்டு வரைபடத்தில், கருங்காலி வரை கொற்றலை ஆறு இருக்கிறது. அதன் பின், வரைபடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.கொற்றலை ஆறு சுருங்கி வருவதாலும், கொட்டப்படும் கழிவுகளாலும், 15 ஆயிரம் மீனவர்களின் மீன்பிடி தொழில் பாதித்து உள்ளது.ஆற்றில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால், வெள்ளம் வந்தால் வடசென்னை பகுதி மூழ்கும். ஏற்கனவே இருந்த வரைபடத்தின்படி கொற்றலை ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளை பலப்படுத்த வேண்டும். அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்.அடுத்த கட்டமாக,50 ஆயிரம் மீனவர்களை திரட்டி போராட்டங்களையும் நடத்த திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை