வைகையை மாசின்றி பாதுகாக்க வழக்கு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வைகையை மாசின்றி பாதுகாக்க வழக்கு

Added : ஜன 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மதுரை, வைகை ஆறு மாசுபடுவதிலிருந்து பாதுகாக்க தாக்கலான வழக்கில் மதுரை கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்யஉயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை வைகை ஆற்றில் கழிவுநீர் கலக்கிறது. ஆக்கிரமிப்புகள் உள்ளன. கொசுக்கள் உற்பத்தியாகி, நோய்கள் பரவுகின்றன. மதுரை உட்பட 5மாவட்டங்களில் கழிவுநீர், குப்பையால் வைகை மாசுபடுவதை தடுக்க வேண்டும். கண்காணிப்புக்குழு அமைக்க, தமிழகஅரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு ரமேஷ் மனு செய்திருந்தார்.2017 செப்டம்பரில் நீதிபதிகள்,'மதுரையில் வைகை ஆற்றை பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கான மறு சீரமைப்புநடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனை, வியாபார நிறுவனங்களின் கழிவுகளை குவிப்போருக்கு மாநகராட்சி கமிஷனர் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். தொடர்ந்து மீறுவோர் மீது முதற்கட்டமாக அபராதம் விதிக்க வேண்டும். அடுத்தகட்டமாக உரிமத்தை 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும்,' என உத்தரவிட்டனர்.நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ேஹமலதா அமர்வு விசாரித்தது.மதுரை மாநகராட்சி கமிஷனர்,' ஆற்றில் கழிவு நீர் கலக்க காரணமானவர்கள், குப்பைகளைகுவிப்போர் மற்றும் அசுத்தம்செய்வோரை கண்டறிந்து, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது,' என அறிக்கை தாக்கல்செய்தார்.நீதிபதிகள்,'தற்போதைய நிலை குறித்து மதுரை கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் பிப்.,12 ல் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X